மேஷம்: மனக் குழப்பங்கள் விலகி தெளிவு பிறக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. தம்பதிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பணவரவு திருப்தி தரும். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவு இருக்கும்.
ரிஷபம்: உடல் உஷ்ணம் அதிகரிக்கும். யாருக்கும், எதற்காகவும் உறுதிமொழி தர வேண்டாம். வீண் செலவுகள் கையைக்கடிக்கும். உறவினர்களால் மனக்கசப்பு வரக்கூடும். பழைய நண்பர்கள் ஆதரவாக இருப்பர்.
மிதுனம்: வெளிவட்டாரத்தில் அனுசரித்து போவதால் நன்மைகள் உண்டு. பணப் பற்றாக்குறை வந்து போகும். வியாபாரத்தில் நிதானம் தேவை. மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை உண்டு.
கடகம்: பேச்சில் ஒரு கம்பீரம் பிறக்கும். சந்திக்காமல் இருந்த பழைய உறவினர்கள் தேடி வருவர். உங்களின் மாறுபட்ட அணுகுமுறையை கண்டு அனைவரும் ஆச்சரியப்படுவர். உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும்.
» லட்சத்தீவு செல்ல மார்ச் மாதம் வரை விமான டிக்கெட் விற்றுத் தீர்ந்தது
» “இந்தியாவுடன் சுமூக உறவு வேண்டும்” - மாலத்தீவு அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் கண்டனம்
சிம்மம்: வீண் குழப்பங்கள் நீங்கி மனதில் தெளிவு பிறக்கும். பிள்ளைகளின் பிடிவாதம் குறையும். உடல்நலம் நிம்மதி தரும். பிள்ளைகளின் வருங்காலத்துக்காக சேமிப்பீர். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
கன்னி: எதிர்பார்த்தபடி வேலையை முடிப்பீர். ஆன்மிகத்தில் ஈடுபாடு உண்டு. பிள்ளைகளின் மனதில் என்ன இருக்கிறது என்பதை கேட்டறிவீர். வியாபாரத்தில் சிலரின் உதவி கிடைக்கும். பழைய வாகனம் செலவு வைக்கும்.
துலாம்: அதிரடியான முடிவுகளை எடுத்து சுற்றியிருப்பவர்களை வியக்க வைப்பீர். கணவன் மனைவிக்குள் நிம்மதி உண்டு. பணவரவு திருப்தி தரும். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் சந்தோஷம் கிட்டும்.
விருச்சிகம்: வீட்டுக்கு உறவினர், நண்பர்களின் வருகை உண்டு. பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். உடல் ஆரோக்கியம் திருப்தி தரும். குடும்பத்தினர் உதவிகரமாக இருப்பர். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
தனுசு: அக்கம் - பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போகவும். குடும்பத்தினரின் பேச்சுக்கு செவி கொடுங்கள். வீண் செலவு வேண்டாம். சாலையை கடக்கும்போது கவனம் தேவை. வியாபாரத்தில் லாபம் உண்டு.
மகரம்: உங்களது உற்சாகமான பேச்சை சுற்றியிருப்பவர்கள் ரசிப்பார்கள். பணவரவு அதிகரிக்கும். வீடு, வாகனத்தை மாற்றுவீர். நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டப்படுவீர்கள். சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்.
கும்பம்: வியாபாரத்திலிருந்த குழப்பங்கள் நீங்கும். குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவீர். பிள்ளைகளின் உடல் நலம் சீராகும். பணவரவு திருப்தி தரும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். வாகனம் செலவு வைக்கும்.
மீனம்: வீண் அலைச்சல்,டென்ஷனிலிருந்து விடுபடுவீர். புது ஆடை, ஆபரணங்கள் சேரும். பிள்ளைகளின் எதிர்காலம் கருதி, துணிச்சலுடன் சில முடிவுகளை எடுப்பீர். இழுபறியாக இருந்த வேலைகளை உடனே முடிப்பீர்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
16 hours ago
ஜோதிடம்
16 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago