இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். பணவரவு உண்டு.

ரிஷபம்: எதிர்ப்புகளை தாண்டி முன்னேறுவீர். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். நவீன மின் சாதனங்கள் வாங்குவீர்கள். குடும்பத்துக்குள் நிலவிய குழப்பம் நீங்கும்.

மிதுனம்: எதிரிகளின் தொல்லை நீங்கும். கணவன் - மனைவிக்குள் நெருக்கம் அதிகமாகும். விருந்தினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். வெளியூர் பயணங்கள் திருப்தி தரும். புதிய வாகனம் வாங்குவீர்.

கடகம்: கணவன் - மனைவிக்குள் இருந்த வீண் சந்தேகம் விலகும். புது பொறுப்புகளும், பதவிகளும் தேடி வரும். உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்ட முயற்சி செய்வீர்.

சிம்மம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர். கணவன்- மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமையடைவீர். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.

கன்னி: உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர் யார், அல்லாதவர் யார் என்பதை உணர்வீர். குழப்பம் நீங்கி மனநிம்மதி ஏற்படும். பாக்கிகள் வசூலாகும். தாயாரின் உடல்நலம் சீராகும். வாகனம் செலவு வைக்கும்.

துலாம்: இரண்டு மூன்று முயற்சிகளுக்குப் பிறகு சில காரியங்கள் முடியும். குடும்பத்தினருடன் அனுசரித்துப் போகவும். வீண் செலவுகள் வரக் கூடும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. மன உளைச்சல் உண்டு.

விருச்சிகம்: சோர்வாக இருந்த நீங்கள் சுறுசுறுப்படைவீர். சிந்தனைத்திறன் அதிகரிக்கும். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் உடல் நலம் சீராக இருக்கும். வாகன செலவு நீங்கும்.

தனுசு: தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர். உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். ஆடம்பர செலவுகளை குறைப்பீர். சகோதர வகையில் மகிழ்ச்சி தங்கும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும்.

மகரம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். உங்கள் ஆலோசனைகளால் மற்றவர்கள் ஆதாயமடைவர். உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

கும்பம்: மனக் குழப்பங்கள் விலகும். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர். வெளியூரிலிருந்து நற்செய்தி வரும். வியாபாரத்தில் லாபம் உண்டு. பயணங்கள் அலைச்சல் தருவதாக அமையும்.

மீனம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். எதிலும் முன்யோசனையுடன் செயல்படவும். வியாபாரத்தில் பங்குதாரர்கள், வேலையாட்களிடம் கோபம் வேண்டாம்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

6 days ago

ஜோதிடம்

6 days ago

மேலும்