மேஷம்: அனைத்து வகையிலும் வெற்றி கிடைக்கும். எதிரிகள் கனிவாக பேசி சமாதானத்துக்கு வருவார்கள். குழப்பங்கள் நீங்கி குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நல்ல செய்திகள் வந்து சேரும். வாகனப் பழுது நீங்கும்.
ரிஷபம்: பழைய உறவினர்கள் வீடு தேடி வந்து பேசுவர். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவர். வியாபாரத்தில் போட்டி விலகி முன்னேற்றத்துக்கான வழி கிடைக்கும். நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும்.
மிதுனம்: தம்பதிக்குள் இருந்து வந்த சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் வரும். வருமானத்தை பெருக்க வழி கிடைக்கும். கலை பொருட்கள் சேரும். சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் உள்ளவர்களின் அறிமுகம் கிடைக்கும்.
கடகம்: அனைத்து கனவுகளும் நிறைவேறும். புது முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். கணவன் - மனைவிக்குள் இருந்த கசப்புகள் விலகும். அலைச்சல் குறையும். வியாபாரரீதியாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும்.
» சென்னையில் ஜன. 7, 8-ல் உலக முதலீட்டாளர் மாநாடு: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு
» அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்: ஆளுநர், தலைவர்களுக்கு ஆர்எஸ்எஸ் அழைப்பு
சிம்மம்: உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும். குடும்பத்தினரின் ஆதரவு உண்டு. வாயுக் கோளாறு ஏற்பட வாய்ப்பு உள்ளதால், உணவில் கட்டுப்பாடு அவசியம். வாகனம் செலவு வைக்கும்.
கன்னி: அனைவரிடத்திலும் இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகள் பேச்சைக்கேட்டு பொறுப்பாக நடந்து கொள்வர். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். முகப்பொலிவு கூடும்.
துலாம்: உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். புதிய பதவிகள் தேடி வரும். பழைய வழக்குகள் சாதகமாகும். மகிழ்ச்சிகரமான சூழல்கள் நிலவும். உத்தியோகத்தில் ஊழியர்கள் ஆதரவாக இருப்பர்.
விருச்சிகம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர். பொறுப்புகள், பதவிகள் தேடிவரும். பிரபலங்கள் அறிமுகமாவர். குடும்பத்துடன் குலதெய்வம் கோயிலுக்கு செல்ல திட்டமிடுவீர்கள்.
தனுசு: தடைபட்டுக் கொண்டிருந்த திருமணம் கைகூடி வரும். ஓரளவு பணவரவு உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பூர்வீக சொத்தை அதிக செலவு செய்து சீரமைப்பீர்கள். வாகனப் பழுது சரியாகும்.
மகரம்:முன்கோபத்தை குறைப்பது நல்லது. உடல் நலக்குறைவு ஏற்படும். எந்த விஷயத்தையும் திட்டமிட்டு செய்யப் பாருங்கள். அடுத்தவர்கள் விவகாரத்தில் அநாவசியமாக மூக்கை நுழைப்பதைத் தவிர்க்கவும்.
கும்பம்: உடன்பிறந்தவர்களின் ஆதரவால் சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். உறவினர்கள், நண்பர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். இல்லத்தில் வசதி பெருகும்.
மீனம்: தொட்டது துலங்கும். தெளிவு பிறக்கும். அனுபவப்பூர்வமாகப் பேசுவீர்கள். பழைய கடனை பைசல் செய்ய புதுவழி பிறக்கும். உடன் பிறந்தவர்கள் உங்கள் வார்த்தைக்கு மதிப்பளிப்பர். புதிய வாகனம் வாங்குவீர்கள்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.முக்கிய செய்திகள்
ஜோதிடம்
42 mins ago
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
22 hours ago
ஜோதிடம்
22 hours ago
ஜோதிடம்
23 hours ago
ஜோதிடம்
23 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago