கும்பம் எடுத்தோம் கவிழ்த்தோம் என்றில்லாது சந்தர்ப்ப சூழ்நிலையை உணர்ந்து சமயோஜித புத்தியுடன் பேசும் நீங்கள் அடங்கி எழுபவர்கள். அமைச்சராக இருந்தாலும் ஆண்டவனாக இருந்தாலும் தவறை தட்டிக் கேட்பவர்கள் நீங்கள்.
உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் சந்திரன் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் உங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். அழகு, இளமைக் கூடும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். நீண்ட நெடுநாட்களாக தள்ளிப் போன விஷயங்கள் முடியும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். வருட ஆரம்பம் முதல் 30.4.2024 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் நிற்பதால் கடினமாக உழைத்து இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள். சுபச் செலவுகளும், பயணங்களும் அதிகரிக்கும். எதிர்பார்த்த வகைகளில் பணம் வரும். கிரஹப்பிரவேசம், திருமணம், சீமந்தம் போன்ற அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். வெளிநாடு செல்வீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகனுக்கு பல இடத்தில் வரன் பார்த்தும் நமக்கு ஏற்ற சம்பந்தம் கிடைக்கவில்லையே என்ற நிலை மாறி, இனி நல்ல வரன் அமையும். மகளின் கூடா நட்பு விலகும். லேசான தலை சுற்றல், சலிப்பு, முன்கோபம், சில காரியங்களில் தடைகள் வந்துச் செல்லும். உறவினர்கள் சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். பூர்வீகச் சொத்தில் இருந்து வந்த வில்லங்கம் விலகும். அதிக வட்டிக்கு வாங்கிய கடனை போராடி பைசல் செய்வீர்கள். மற்றவர்களின் அறிவுரைகளை முழுமையாக நம்பி அதிரடியான முடிவுகளை எடுக்க வேண்டாம். வீடு வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்கள் சிலர் உங்களுக்கு உதவ முன்வருவார்கள்.
குருபகவான் 1.5.2024 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்கிறார். எனவே மன உளைச்சல், மறைமுக எதிர்ப்பு, வீண் விமர்சனம், மூட்டு வலி, சிறு சிறு அவமானங்கள் வரக்கூடும். எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். தாயாரின் உடல் நிலை பாதிக்கும். வாகனத்தில் செல்லும் போதும், சாலையை கடக்கும் போதும் கவனம் தேவை. தாய்வழி உறவினர்களுடன் உரசல்கள் வரும். வழக்கு சம்பந்தமான விஷயங்களில் பின்னடைவு ஏற்படும். சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். கடன் தொந்தரவுகள் அதிகரிக்கும். மற்றவர்களின் தவறான போக்கை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள். யாருக்கும் எதற்காகவும் உறுதிமொழி தர வேண்டாம்.
இந்த வருடம் முழுவதும் உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் ராகுவும், 8-ல் கேதுவும் அமர்வதால் அவசர முடிவுகளை தவிர்க்கப் பாருங்கள். குடும்பத்தில் அவ்வப்போது கூச்சல், குழப்பங்கள் வந்து நீங்கும். படபடப்பு, முன்கோபம், பார்வைக் கோளாறு, தூக்கமின்மை வந்து விலகும். பேச்சில் கடுமையைக் குறைத்து எதிலும் நிதானமாக இருக்கவும். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் பொறுப்பில்லாத்தனத்தை நினைத்து வருந்துவீர்கள். அவர்களின் போக்கிலேயே சென்று திருத்தப் பாருங்கள். அடுக்கடுக்கான செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறுவீர்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். அக்கம் - பக்கம் வீட்டாருடன் அளவாகப் பழகுங்கள். உறவினர்களில் சிலர் பழசை மறந்து பேசுவார்கள்.
வருடம் முழுவதும் ஜென்மச் சனி தொடர்வதால் பழைய பிரச்சினைகள் தலை தூக்கும். கணவன் - மனைவிக்குள் சின்னச் சின்ன சண்டைகள் வந்து போகும். பெரிதாக்க வேண்டாம். நெருங்கிய நண்பர்கள், உறவினர்களாக இருந்தாலும் யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். எதிராளி அடிக்கடி வாய்தா வாங்குவதால் வழக்கில் தீர்ப்புத் தள்ளிப் போகும். பெரிய பதவியில் இருப்பவர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். வெளிவட்டாரத்தில் யாரையும் தாக்கி பேச வேண்டாம். பணவரவு இருந்தாலும் வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும்.
வியாபாரிகளே! மே, ஜூன் மாதங்களில் கணிசமாக லாபம் உயரும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் புது ஏஜென்சி எடுப்பீர்கள். வாடிக்கையாளர்களை கவர சில சலுகைகளை அறிவிப்பீர்கள். பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் உங்களை கோபப்படுத்தும்படி பேசினாலும், அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். ஹோட்டல், கட்டிட பொருட்கள், கமிஷன், ரியல் எஸ்டேட் வகைகளால் ஆதாயமடைவீர்கள்.
உத்தியோகஸ்தர்களே! உங்கள் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். புதிய பதவி தேடி வரும். மே, அக்டோபர், டிசம்பர் மாதங்களில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். சம்பளம் உயரும். சக ஊழியர்கள் குறை கூறும் அளவுக்கு நடந்து கொள்ளாதீர்கள்.
இந்த புத்தாண்டு, முதல் முயற்சியில் எதையும் முடிக்க முடியாமல் போனாலும் தொடர்முயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் சாதிக்க வைக்கும்.
பரிகாரம்: கோயம்புத்தூர் மாவட்டம், கொழுமம் எனும் ஊரில் வீற்றிருக்கும் கல்யாண வரதராஜரை சென்று வணங்குங்கள். புற்று நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவுங்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago