கன்னி ராசியினருக்கான ஜனவரி மாத பலன்கள் முழுமையாக | 2024

By Guest Author

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை - ராசியில் கேது - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன், புதன் - சுக ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி - களத்திர ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஸ்தானத்தில் குரு என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றங்கள்: 08-01-2024 அன்று புதன் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 15-01-2024 அன்று சூர்ய பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 18-01-2024 அன்று சுக்ர பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 27-01-2024 அன்று புதன் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: புதன் பகவானை ராசிநாதனாகக் கொண்ட கன்னி ராசி அன்பர்களே! இந்த மாதம் காரிய வெற்றி உண்டாகும். பணவரத்து வழக்கத்தை விட அதிகரிக்கும். ஆனால் செலவும் அதற்கு ஏற்றார் போல் இருக்கும். மற்றவர்களது உதவியும் கிடைக்கும். சாதூர்யமாக பேசி எதிலும் வெற்றி காண்பீர்கள். அனுபவபூர்வமான அறிவுதிறன் அதிகரிக்கும்.தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். பேச்சாற்றலால் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுப்பீர்கள். பங்கு மார்க்கெட் லாபம் ஓரளவு கூடும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல்திறன் அதிகரிக்கும். பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் வந்து சேரும். குடும்பத்தில் மனம் மகிழும்படியான நிகழ்ச்சி நடக்கும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். சிலர் அதற்கான முயற்சியில் ஈடுபடுவார்கள். கணவன், மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்யம் உண்டாகும். பெண்கள் சாதூர்யமாக பேசி எல்லா காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

பணவரத்து கூடும். பொறுப்புகள் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு எதிர்பாராத நல்ல திருப்பங்கள் ஏற்படும். மனதில் சந்தோஷம் உண்டாகும். எந்த பிரச்சினை வந்தாலும் சமாளித்து முன்னேறிச் செல்வீர்கள். தெளிவான முடிவுகள் எடுப்பதன் மூலம் இழுபறியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். மற்றவர்கள் பாராட்டக் கூடிய மிகப்பெரிய செயலை செய்து முடிப்பீர்கள்.

அரசியல்துறையினருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். மரியாதை அந்தஸ்து ஆகியவை உயரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். திறமை வெளிப்படும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். மனதில் தைரியம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்விக்கான செலவு கூடும். சகமாணவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான பலன் கிடைக்கும்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: இந்த மாதம் அடுத்தவர்களின் நலனுக்காக உழைக்க வேண்டி இருக்கும். சொத்துக்களை வாங்கும்போதும் விற்கும்போதும் கவனமாக இருப்பது நல்லது. இடமாற்றம் உண்டாகலாம். ஆடை, ஆபரணம் சேரும். தொழில், வியாபாரம் சற்று நிதானமாக நடக்கும். எதிர்பார்த்த லாபம் இருந்தாலும் தொழில் தொடர்பான செலவும் கூடும்.

அஸ்தம்: இந்த மாதம் வியாபாரிகள் சரக்குகளை வாங்கும்போது கவனித்து வாங்குவதும் பாதுகாப்பாக வைப்பதும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம்.

சித்திரை 1, 2, பாதங்கள்: இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபப்படாமல் நிதானமாக பேசி அனுசரித்து செல்வது நல்லது. சகோதரர் வகையில் உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.

பரிகாரம்: பகவத்கீதை படித்து கண்ணனை வணங்கி வர எல்லா பிரச்சினை களும் தீரும். மன நிம்மதி உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, புதன், வெள்ளி; தேய்பிறை: ஞாயிறு, வியாழன், வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: 18, 19, 20 | அதிர்ஷ்ட தினங்கள்: 12, 13

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்