இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள். புது முயற்சிகளில் ஏற்பட்ட தடைகள் விலகும். வியாபாரத் தில் பிரச்சினை தீர்ந்து மனநிம்மதி ஏற்படும். அலுவல கத்தில் வேலைபளு குறையும். பணவரவு உண்டு.

ரிஷபம்: தாய்வழி சொந்தங்களால் ஆதாயம் உண்டு. வியாபார ரீதியாக புதியவர்களை சந்திப்பீர்கள். பண விஷயத்தில் கவனமாக இருங்கள். தம்பதிக்குள் இருந்த பிணக்கு நீங்கும். எதிர்காலம் பற்றி சில முடிவுகள் எடுப்பீர்கள்.

மிதுனம்: குடும்பத்தினரின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கொடுங்கள். வீண் செலவுகளை குறைத்து சேமிப்புகளை அதிகரிக்க சில யோசனைகள் தோன்றும். பால்ய நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

கடகம்: உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். குடும்பத்தில் இருந்த பனிப்போர் நீங்கும். பிள்ளைகளிடம் பாசம் காட்டுவீர்கள். வாகனத்தால் ஏற்பட்ட செலவு நீங்கும். வெளியூர் பயணங்கள் திருப்தி தரும்.

சிம்மம்: உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பர். வீட்டில் விசேஷங்கள் ஏற்பாடாகும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு இருக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்படும்.

கன்னி: நீண்டநாளாக நினைத்துக் கொண்டிருந்த காரியம் ஒன்று இப்போது நிறைவேறும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாண்டு வெற்றி பெறுவீர்கள்.

துலாம்: குடும்பத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். எலெட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் வாங்குவீர்கள். தாயார், குழந்தைகளின் உடல்நிலை சீராகும். கூட்டுத் தொழிலில் இருந்த குழப்பம் விலகும்.

விருச்சிகம்: புது நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழிலில் அலைச்சல் இருக்கும். வீண் செலவுகளை கட்டுப்படுத்துங்கள். தாய்வழி சொந்தங்கள் வீட்டுக்கு வருவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஆதரவு உண்டு.

தனுசு: குடும்பத்தில் அமைதி நிலவும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உங்களை குறை கூறியவர்கள் இப்போது புகழ்வார்கள். அலுவலகத்தில் வேலைபளு இருக்கும்.

மகரம்: குடும்பத்தில் மதிப்பு உயரும் பிள்ளைகளால் நிம்மதியுண்டாகும். கடன் சுமைகளை குறைக்க புது வழி பிறக்கும். வாகனத்திலிருந்த பழுது நீங்கும். நண்பர்கள், உயரதிகாரிகளால் அனுகூலம் உண்டு.

கும்பம்: வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். பிள்ளைகளால் மனநிம்மதி கிட்டும். உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். சொத்து பிரச்சினையில் உடன்பிறந்தவர்களை அனுசரித்துச் செல்லவும்.

மீனம்: நீண்ட நாட்களுக்குப் பிறகு பால்ய நண்பர்களை சந்திப்பீர். குடும்பத்தினரின் அன்பு அதிகரிக்கும். கலை பொருட்களை வாங்குவீர். உத்தியோகத்தில் நிம்மதி கிட்டும். வீண்அலைச்சல் அவ்வப்போது வந்து போகும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்