மேஷம்: கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி, அன் யோன்யம் அதிகரிக்கும். தள்ளுபடி விற்பனையில் வாகனம் வாங்குவீர்கள். புது டிசைனில் ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள்.
ரிஷபம்: தேவையற்ற அச்சம், கனவுத் தொல்லைகள் வந்து நீங்கும். பழைய கசப்பான சம்பவங்களை நினைத்து வருந்துவீர்கள். முன்கோபத்தால் நல்ல நட்பை இழந்துவிடாதீர்கள்.
மிதுனம்: எதிர்மறை எண்ணத்துக்கு இடம்தராமல் நம்பிக்கை யுடன் செயல்படுங்கள். சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்துகொள்வீர்கள். குடும்பத்தில் சின்ன சின்ன சச்சரவு வந்து நீங்கும்.
கடகம்: பல வகையிலும் பணப் புழக்கம் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்கள், ஆடை, அணிகலன் வாங்குவீர்கள். செல்லும் இடமெல்லாம் சிறப்பு கூடும். பயணம் இனிதாக இருக்கும்.
சிம்மம்: உற்சாகம், தோற்றப் பொலிவு அதிகரிக்கும். எதிர்மறை எண்ணங்கள் விலகும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். தீராத பிரச்சினைகளையும் தீர்க்கும் சக்தி உண்டாகும்.
கன்னி: ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். வருமானம் உயரும். எதிர்பாராத தொகை கைக்கு வரும். அனைவரையும் அரவணைத்து செல்வீர்கள்.
துலாம்: வாகன வகையில் தேவையற்ற செலவு ஏற்படும். பிள்ளைகளுடன் வாக்குவாதம் வந்து நீங்கும். அவர்களது நட்பு வட்டத்தை கண்காணிப்பது அவசியம். எதிலும் பொறுமை தேவை.
விருச்சிகம்: இழுபறியாக இருந்த கல்யாணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். உறவினர்கள் உங்கள் சகிப்புத் தன்மையை பாராட்டுவார்கள். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
தனுசு: அக்கம் பக்கத்தினருடன் இருந்த மோதல் போக்கு நீங்கும். சகோதர உறவுகள் இடையே மனம்விட்டு பேசி நல்ல முடிவுகள் எடுப்பீர்கள். ஆன்மிகம், யோகாவில் ஈடுபாடு ஏற்படும்.
மகரம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பழுதான வாகனம் சரியாகும். தைரியமாக, தன்னிச்சையாக செயல் பட்டு முக்கிய முடிவு எடுப்பீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.
கும்பம்: தேவையற்ற கவலை, மனக் குழப்பங்கள் நீங்கும். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, கடையை விரிவுபடுத்தி கட்டும் முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும்.
மீனம்: ஆடை, அணிகலன்கள் சேரும். கல்யாண முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். கைமாற்றாக வாங்கிய பணத்தை திருப்பித் தருவீர்கள். திடீர் பண வரவு, பொருள் வரவு உண்டாகும்.
ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
6 days ago