இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: நம்பிக்கைக்கு உரியவர்களுடனான சந்திப்பு நிகழும். குடும்பத்தில் அமைதி நிலவும். கிரஹப்பிரவேசம், திருமணம், சீமந்தம் என்று சுபச் செலவுகள் அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள்.

ரிஷபம்: தம்பதிக்குள் இருந்து வந்த பிரச்சினை நீங்கும். வீடு, வாகன யோகம் உண்டாகும். உடன் பிறந்தவர்களின் ஆதரவால் பூர்வீக சொத்து தொடர் பான குழப்பங்கள் நீங்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

மிதுனம்: பிள்ளைகளுக்கு அவர்கள் விரும்பிய படிப்பில் இடம் கிடைக்கும். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்தித்து மகிழ்வீர். தடைபட்ட காரியங்கள் எளிதாக முடியும். அக்கம் பக்கத்தினருடன் அளவாக பழகவும்.

கடகம்: குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி அமைதியான சூழல் உண்டாகும். மனதில் தெளிவு பிறக்கும். இங்கிதமான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பணவரவு உண்டு.

சிம்மம்: பூர்வீக வீட்டை சீரமைத்து, புதுப்பிக்க திட்டமிடுவீர். பிள்ளைகளின் படிப்பு தொடர்பான அலைச்சல் இருக் கும். முக்கிய பிரமுகர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர். அயல்நாட்டு பயணம் ஏற்படும்.

கன்னி: பழைய வழக்குகளில் வெற்றி கிடைக்கும். புதிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர். மனதில் எதிர்காலம் குறித்த கவலைகள் வந்து நீங்கும். தம்பதிக்குள் மனம்விட்டுப் பேசிக் கொள்வது நன்மை தரும்.

துலாம்: நீண்டநாள் கனவு நிறைவேறும். எதிர்பாராத பணவரவு திருப்தி தரும். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் குடும்பப் பிரச்சினைகளை கூறுவதை தவிர்க்கவும்.

விருச்சிகம்: கிரஹப்பிரவேசம், திருமணம், சீமந்தம் என்று குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டு. நண்பர்கள், விருந்தினர்களிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும். பிள்ளைகள் உங்கள் பேசைக் கேட்டு நடப்பார்கள்.

தனுசு: பழைய வீட்டை விற்றுவிட்டு புதிது வாங்கத் திட்டமிடுவீர். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வழக்கில் வெற்றி கிடைக்கும். புதிய பதவிக்கு தேர்ந்தெடுக் கப்படுவீர். உறவினர்களை அனுசரித்துச் செல்லவும்.

மகரம்: திடீர் பணவரவு உண்டு. பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. குடும்பத் துடன் குலதெய்வ கோயிலுக்குச் செல்ல திட்டமிடுவீர் கள். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும்.

கும்பம்: குடும்பத்தினருடன் வீண் விவாதங்களைத் தவிர்க்க வும். உடல், மனதில் ஒருவித சோர்வு உண்டாகும். மன அமைதிக்கு தியானம் செய்யவும். பிள்ளைகளிடம் உங்கள் கோபத்தைக் காட்ட வேண்டாம்.

மீனம்: திடீர் பயணங்கள், செலவுகள் ஏற்படும். முக்கிய பிரமுகர்களின் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர் கள். யாருக்கும் எதற்காகவும் உறுதிமொழி தர வேண் டாம். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்