புத்தாண்டு பலன்கள் 2024 - கும்பம் ராசியினருக்கு எப்படி?

By Guest Author

கும்பம் ( அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) பூர்வீகச் சொத்து என்று பிறர் பலத்தை நம்பாமல் உங்கள் சொந்த பலத்தை மட்டுமே உறுதியானது என நம்பி, தளராத தன்னம்பிக்கையுடன் அயராமல் உழைத்து சாதனையாளர் என்ற பெயரைப் பெறக்கூடிய செயலாற்றல் படைத்தவர் நீங்கள். உங்கள் இரக்க சுபாவத்தின் காரணமாக சிலர் பயன்பெறக்கூடுமாயின் சிலர் அதையே உங்கள் பலவீனமாகக் கருதி உங்களை ஏமாற்றவும் முற்படுவார்கள். அதன் காரணமாக நீங்கள் மனவருத்தமடைவீர்கள். சரியானபடி ஆட்களைப் புரிந்து கொள்வதன் மூலம் இக்குறையைப் போக்கிக் கொள்ளுங்கள். உங்கள் முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது. சின்னஞ்சிறு வேலையையும் மிகுந்த கற்பனைத் திறத்துடனும் கலை நுணுக்கத்துடனும் செய்வீர்கள். அதனால் பாராட்டுகளைப் பெறக்கூடிய உங்களுக்குக் கெடுதல் செய்ய யாராலும் முடியாது என்னும் அளவுக்கு தெய்வபலம் உங்களுக்கு உள்ளது. எத்தகைய இன்னல்களையும் எதிர்கொண்டு முன்னேற்றப்பாதையில் நடை பயில்வீர்கள்.

இந்த உங்கள் காரியங்களில் கூடுதல் அக்கறை காட்டுவீர்கள். சந்தேகத்துக்கு இடமான விஷயங்களை ஒன்றுக்கு இரண்டு முறை செயல்படுத்துவீர்கள். செய்தொழிலை விரிவுபடுத்த சிறிது கடன் வாங்கவும் நேரலாம். உங்கள் பேச்சைத் திரித்து புரிந்துக் கொள்ள வாய்ப்புள்ளதால், வெளியில் பேசும்போது வார்த்தைகளை அளந்து பேசவும். நெடுநாளாக விற்பனை ஆகாமல் இருந்த சொத்துக்கள் சிறிய தாமதத்துக்குப் பிறகே விற்பனையாகும். உடலாரோக்கியத்திலும் சிறு சிறு தொல்லைகள் வந்தாலும், மருத்துவச் சிகிச்சையால் அனைத்தும் சரியாகிவிடும். சில நேரங்களில் ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்க வாய்ப்பு இருப்பதால் அவசியமற்ற பொருட்களை வாங்க வேண்டாம். வழக்குகளிலும் தீர்ப்பு வர தாமதமாகும். தேவையற்ற வாய்தாக்களும் உங்களை வருத்தமடையவே செய்யும். வாழ்க்கையில் நல்லது எது கெட்டது எது என்பதை அறிந்து கொள்வீர்கள். மற்றபடி சகோதர சகோதரிகளிடம் உள்ளன்போடு பழகி அவர்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். ஆரவாரமில்லாமல் சமூகத்திற்கு நன்மை தரும் நல்ல காரியங்களைச் செய்யும் காலகட்டமாக இது அமைகிறது.

உத்தியோகஸ்தர்களுக்கு: நீங்கள் எவ்வளவுதான் முயன்றாலும் உங்கள் முயற்சிகளில் தடங்கல், தாமதங்களைத் தவிர்க்க முடியாது. உங்கல் உயரதிகாரிகளின் கண்டனங்களுக்கு ஆளாகாமல் தப்ப, உங்கள் பணிகளில் கண்ணும் கருத்துமாக இருந்து வர வேண்டும். உங்கள் வசம் உள்ள ஆவணங்களைப் பத்திரமாகப் பாதுகாத்து வர வேண்டியதும் அவசியம். சக பணியாளர்களாலும், தொல்லைகள் ஏற்படக்கூடிய நிலை உள்ளதால் அவர்களிடமும் பணிவாகவும் சுமூகமாகவும் நடந்து கொள்ள வேண்டும். குடும்பத்தில் சிறு சச்சரவுகள் தோன்றும் போதும் உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு பொறுமையாய் இருப்பது அவசியம்.

வியாபாரிகளுக்கு: எதிர்பார்த்த லாபம் இருக்காது. எனவே சிக்கனத்தைக் கடைபிடிப்பது நன்மை தரும். கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. வேலையாட்களிடம் அனுசரனையாக நடந்து கொள்வதன் மூலம் நஷ்டங்களைத் தவிர்த்து பொருளாதார நெருக்கடி வராமல் காக்கலாம். கூட்டுத் தொழில் புரிபவர்களுக்கு கூட்டாளிகளுடன் மனக்கசப்பு நேர வாய்ப்பிருப்பதால் கவனம் தேவை.

கலைத்துறையினருக்கு: முயற்சி செய்தால் பல புதிய வாய்ப்புகளைப் பெறலாம். உங்களால் நேரடியாக செய்து முடிக்கக்கூடியவற்றை நீங்களாகவே செய்வது எதிர்கால குழப்பத்திலிருந்து உங்களைக் காப்பாற்றும். பொருளாதார நிலை சுமாராக இருக்கும். உங்கள் பெயருக்குப் பெருமை சேர்க்கும் வகையிலான செயல்களில் ஈடுபடுவீர்கள்.

மாணவர்களுக்கு: ஒருமுறைக்குப் பலமுறை பாடங்களை படிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். விளையாட்டுகளில் கவனத்தைக் குறைத்து, பாடங்களில் கவனத்தைச் செலுத்துவதன் மூலம் படிப்பில் மேன்மை நிலை அடையலாம். நினைவாற்றலை அதிகப்படுத்துவதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம்.

அரசியல்வாதிகளுக்கு: உங்களின் பணிகளில் கவனம் செலுத்துவது நன்மை தரும். மேலிடத்தில் உங்களைப் பற்றி அவதூறு கூறுபவர்கள் உங்களுடனே இருப்பார்கள். எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள். தலைமை உங்களைப் புரிந்து கொண்டு உங்களுக்கு பொறுப்பான பதவிகயையும், பொருளாதார உதவியையும் செய்வார்கள்.

பெண்களுக்கு: குடும்பத்தில் சிறு குழப்பங்கள் ஏற்பட்டாலும் அவை தானகவே நிவர்த்தியாகிவிடும். கோபத்தைக் குறைப்பதன் மூலம் சிக்கல்கள் தீரும். வேலைக்குப் போகும் பெண்கள் சரியான நேரத்தைக் கடைபிடிப்பது அவசியம். உங்கள் இரகசியங்களை எவரையும் நம்பி வெளிப்படுத்தாமலிருப்பது நன்மை தரும்.

நட்சத்திர பலன்கள் > அவிட்டம் 3, 4ம் பாதங்கள்: இந்த ஆண்டு தொழில் வியாபாரம் ஏற்ற இறக்கமாக இருக்கும். எனினும் நஷ்டம் ஏற்படாது. கவலை வேண்டாம். அரசியல்வாதிகளுக்கு மகிழ்ச்சியும், துன்பமும் மாறி மாறி வரலாம். மாணவமணிகளும்,. கலைஞர்களும் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். சிலருக்குத் திருமண வாய்ப்புகள் அமையக்கூடும். பெண்களால் சிலர் அனுகூலம் பெறுவர். உடல்நலத்தில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம். தொலை தொடர்பு செய்திகள் இனிமையானதாக இருக்கும்.

சதயம்: இந்த ஆண்டு குடும்பத்தில் ஏற்படும் சிறு மனக்குழப்பங்களை உங்கள் பொறுமையின் மூலம் தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் அகலக்கால் வைக்காமல் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து, திட்டமிட்டு நிதானமாகச் செயல்படுவதன் மூலம் சங்கடங்கள் குறையும். தெய்வ அனுகூலத்தால் பொருளாதார நிலையில் எவ்வித சங்கடமும் வராது. தேவைகள் இல்லாமல் கடன் பெறுவதை தவிர்க்கவும்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: இந்த ஆண்டு சிறு சிறு தடைகளுக்குப் பிறகு வெற்றி நிச்சயம் உண்டு. தெய்வ அனுகிரகம் உங்களைக் காக்கும். கடிதப் போக்குவரத்தின் மூலம் நல்ல தகவல்கள் வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் தொந்தரவு காணப்பட்டாலும், பேச்சு வார்த்தை மூலம் சரி செய்துவிடலாம். நண்பர்கள் பெருமளவில் உதவியாக இருப்பார்கள்.

பரிகாரம்: பகவத்கீதை படித்து ஸ்ரீகிருஷ்ணனை வணங்கி வர எல்லா பிரச்சினைகளும் தீரும். மனமகிழ்ச்சி உண்டாகும் | விளக்கு பரிகாரம்: வீட்டில் தினமும் 4 ஒரு முக மண் அகல் விளக்கு இலுப்பை எண்ணை விட்டு ஏற்றவும் | அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6, 9 | அதிர்ஷ்ட ஹோரைகள்: சூரியன், செவ்வாய், சுக்கிரன் | அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடக்கு | அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், புதன், வெள்ளி; தேய்பிறை: திங்கள், வியாழன், வெள்ளி | + தொழில் மற்றும் உத்தியோகத்தில் முன்னேற்றம் | - வாழ்க்கைத்துணையுடன் கருத்து வேறுபாடு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

மேலும்