மேஷம்: அதிரடி திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். நண்பர்கள் சிலர் உங்களை தேடி வந்து உதவி கேட்பர். பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். வாகனம் செலவு வைக்கும்.
ரிஷபம்: முகப் பொலிவு கூடும். அதிகாரப்பூர்வமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமை அடைவீர்கள்.
மிதுனம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர்கள். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்த முடிவுகளை எடுப்பீர்கள். பழைய வழக்குகளில் முன்னேற்றம் உண்டு.
கடகம்: வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். உறவினர்கள், நண்பர்களின் சந்திப்பு நிகழும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசி பழகவும்.
சிம்மம்: மனக் குழப்பங்கள் விலகி தெளிவு கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்ட திட்டமிடுவீர்கள்.
கன்னி: பழைய பிரச்சினைகளால் கவலைகள் வந்து போகும். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாக புரிந்துக் கொள்வார்கள். பேசும்போது கவனமாக இருக்கவும். வாகனம் செலவு வைக்கும்.
துலாம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். வீண் விவாதங்களைத் தவிர்த்து, குடும்பத்தினரை அனுசரித்துப் போகவும். திடீர் செலவுகள் உண்டு. மன அமைதிக்கு தியானம் செய்யவும்.
விருச்சிகம்: உறவினர், நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சி அடைவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும்.
தனுசு: நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும்.சகோதர வகையில் நன்மை பிறக்கும். தன்னம்பிக்கை, உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். வீடு, வாகனத்தை மாற்றுவீர்கள்.
மகரம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். சிந்தனைத் திறன் அதிகரிக்கும். கிரஹப்பிரவேசம், திருமணம், சீமந்தம் என்று குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். புனித தலங்கள் சென்று வருவீர்கள்.
கும்பம்: அக்கம் பக்கம் இருப்பவர்களை அனுசரித்து போகவும். அடுத்தவர்களை குறை கூறுவதை நிறுத்தவும். நீண்ட நாளாக எதிர்பார்த்த உயர் பதவி கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள்.
மீனம்: சோர்வு நீங்கி துடிப்புடன் காணப்படுவீர்கள். தம்பதிக்குள் இருந்த மனஸ்தாபம் நீங்கும். விருந்தினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல் உண்டு.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
13 hours ago
ஜோதிடம்
23 hours ago
ஜோதிடம்
23 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago