மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ டிச.7 - 13

By Guest Author

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் குரு(வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - சப்தம ஸ்தானத்தில் சுக்கிரன் - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய், புதன்(வ) - தொழில் ஸ்தானத்தில் சனி - விரைய ஸ்தானத்தில் ராகு என கிரகநிலைகள் உள்ளது.

பலன்கள்: வாக்கு வன்மையால் எதையும் சிறப்பாக செய்து முடிக்கும் உங்களுக்கு இந்த வாரம் எதிர்ப்புகள் விலகும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் சாதகமாக நடந்து முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அகலும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த வீண் பிரச்சினைகள் நீங்கி அமைதி ஏற்படும். விருந்தினர்கள் வருகை இருக்கும். குடும்ப செலவுகள் குறையும். பெண்களுக்கு புத்திசாதூரியம் அதிகரிக்கும்.

கலைத்துறையினருக்கு திடீர் கோபங்கள் உண்டாகலாம். புத்திசாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு சாமர்த்தியமான உங்களது செயல் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். முக்கிய நபர்கள், அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் நட்பு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். திறமை வெளிப்படும். ஆசிரியர்களுடன் நல்ல உறவு ஏற்படும். பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள்.

அஸ்வினி: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் முன்னேறத் தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்.

பரணி: இந்த வாரம் குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன், மனைவி ஒருவருக் கொருவர் புரிந்து கொண்டு செயல்படுவார்கள். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். புத்திசாதூரியத்தால் பொருள் சேர்க்கை ஏற்படும். தாய்வழி உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும்.

கார்த்திகை: இந்த வாரம் தடைபட்ட காரியங்களில் தடை நீங்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகும். தேவையான பண உதவி கிடைக்கும்.

பரிகாரம்: ஸ்ரீமகா கணபதியை பூஜித்து வழிபட்டு வர எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். காரிய தடைகள் நீங்கும்.

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை - பஞ்சம ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன் - சப்தம ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய், புதன்(வ) - பாக்கிய ஸ்தானத்தில் சனி - அயன சயன போக ஸ்தானத்தில் குரு(வ) - லாப ஸ்தானத்தில் ராகு என கிரகநிலைகள் உள்ளது.

பலன்கள்: செயல்திறமையால் வெற்றி கொள்ளும் உங்களுக்கு இந்த வாரம் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எண்ணிய காரியங்கள் கைகூடும் சூழ்நிலை உருவாகும்.

தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்வது பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். தேவையான நிதியுதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து காணப்படும். நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து அவர்களது நன்மதிப்பை பெறுவீர்கள். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.

வாழ்க்கை துணையின் ஆதரவுடன் எதிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். செயல் திறமை அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு வீண் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும்.

மாணவர்களுக்கு தேவையற்ற எண்ணங்களை விட்டுவிட்டு மனதை ஒருமுகப்படுத்தி பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.

கார்த்திகை: இந்த வாரம் காரிய தடை, தாமதம் உண்டாகலாம். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவதும் கவனமாக செயல்படுவதும் நல்லது. குடும்ப பிரச்சினைகள் தீரும். எதுவும் வரட்டும் பார்க்கலாம் என்ற முரட்டு தைரியம் கூடாது. பொருளாதார சிக்கல் ஏற்பட்டு நீங்கும்.

ரோகினி: இந்த வாரம் எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவு எடுக்க முடியாத குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சொன்ன சொல்லை காப்பாற்றி விடுவீர்கள். அதனால் மதிப்பு கூடும். எதிர்ப்புகளை சமாளித்து முன்னேற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

மிருகசீரிஷம்: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் திட்டமிட்டபடி செயலாற்றி வெற்றியை எட்டிப்பிடிப்பார்கள். வியாபார போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் வந்த சேரும். வருமானம் கூடும்.

பரிகாரம்: நந்தீஸ்வரரை வணங்கி வருவது எதிர்பார்த்த காரியம் நடந்து முடியும். எதிலும் சாதகமான நிலை காணப்படும்.

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - சுக ஸ்தானத்தில் கேது - பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய், புதன்(வ) - அஷ்டம ஸ்தானத்தில் சனி - லாப ஸ்தானத்தில் குரு(வ) - தொழில் ஸ்தானத்தில் ராகு என கிரகநிலைகள் உள்ளது.

பலன்கள்: நிதானமாக முடிவெடுக்கும் உங்களுக்கு இந்த வாரம் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. சுலபமாக முடிந்துவிடும் என்று நினைக்கும் காரியம் கூட சற்று தாமதமாகலாம். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கலாம். ராசியை தைரியாதிபதி சூரியன் பார்ப்பதால் வெளியூர் பயணம் அதன் மூலம் அலைச்சல் உண்டாகலாம்.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் அலைச்சலுக்கு பின் நடந்து முடியும். தேவையான பண உதவி சற்று தாமதமாக கிடைக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். உதவிகள் செய்யும்போது ஆலோசித்து செய்வது நல்லது.

பெண்களுக்கு எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட தாமதமாகலாம். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்திலிருந்து உங்களுக்கு சந்தோஷமான செய்திகள் வந்து சேரும். கலைத்துறையினருக்கு வருமானம் நன்றாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை. ஒரு முறைக்கு இருமுறை பாடங்களை படிப்பது நல்லது.

மிருகசீரிஷம்: இந்த வாரம் குடும்பத்துக்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை பெரிதாக பேசுவார்கள். கணவன் மனைவிக்கிடையே நிதானமான போக்கு காணப்படும். பிள்ளைகளின் கருத்தை அறிந்து அதற்கேற்றார் போல் செயல்படுவது நன்மை தரும். மூத்த சகோதரர் உடல்நலத்தில் கவனம் தேவை.

திருவாதிரை: இந்த வாரம் மனக்குழப்பம் ஏற்பட்டு நீங்கும். திட்டமிட்டு செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். மாணவர்களுக்கு கூடுதலாக பொறுப்புகள் சேரும். கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். கவனமாக படிப்பது நல்லது. எதிலும் எச்சரிக்கை தேவை. காரிய தடை தாமதம் வரலாம்.

புனர்பூசம்: இந்த வாரம் குடும்ப பிரச்சினை தீரும். ஒரு முறைக்கு பலமுறை எதையும் ஆராய்ந்து பார்த்து செய்வது நன்மை தரும். பணவரவு உண்டு. ஆனால் வீண் செலவும் ஏற்படும். சொத்துக்கள் வாங்குவது, விற்பது ஆகியவற்றில் கவனம் தேவை. பயணங்களின் போதும், வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கை தேவை.

பரிகாரம்: ஸ்ரீ ஆஞ்சநேயரை வணங்க மனதில் தைரியம் உண்டாகும். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE