இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: எதிர்பார்த்த வகையில் பணம் வராவிட்டாலும் எதிர்பாராத வகையில் பணம் வந்து கைகொடுக்கும். வேற்றுமொழி பேசுபவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வெளியூர் பயணம் ஏற்படக் கூடும்.

ரிஷபம்: பிரச்சினைகளைத் தீர்க்க நல்ல வழி கிடைக்கும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளித்து விடுவீர்கள். உங்களின் தைரியம் கூடும். தாயார் ஆதரவாக இருப்பார்.

மிதுனம்: எதிர்பார்த்த வகையில் பணம் வரும். வீடு கட்டுவதற்கு, வாங்குவதற்கு வங்கிக் கடன் உதவி கிடைக்கும். பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். மூத்த சகோதரர் உதவுவார்.

கடகம்: தூக்கம் குறையும். உங்களது திறமைகள் மீது நீங்கள் நம்பிக்கை வைப்பது நல்லது. சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும், விமர்சித்தாலும் அதை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

சிம்மம்: குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். மின் சாதனங்கள் பழுதாகக் கூடும். அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்குவதை தவிர்த்து விடுங்கள்.

கன்னி: பழைய நகையை மாற்றி புது டிசைனில் ஆபரணம் வாங்குவீர்கள். உறவினர், நண்பர்களின் வருகையால் வீடு களைகட்டும். கனிவாகப் பேசி எல்லோரின் கவனத்தையும் ஈர்த்து விடுவீர்கள்.

துலாம்: திடீர் பயணங்களால் உற்சாகமடைவீர்கள். விலகியிருந்த சொந்தபந்தங்கள் மீண்டும் வருவார்கள். மனைவிவழியில் உதவிகள் உண்டு. பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும்.

விருச்சிகம்: தடைபட்ட காரியங்களை மாறுபட்ட அணுகு முறையால் முடித்துக் காட்டுவீர்கள். தள்ளிப்போன வழக்கில் தீர்ப்பு சாதகமாக வரும். அரசாங்க காரியங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

தனுசு: திடீர் செலவுகள், பயணங்கள் அதிகரிக்கும். புகழ்பெற்ற பழமையான புண்ணிய தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். சிலர் பழைய வீட்டை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

மகரம்: மாறுபட்ட யோசனைகள் உங்கள் மனதில் உதிக்கும். யதார்த்தமான முடிவுகள் எடுப்பீர்கள். தன் கையே தனக்குதவி என்பதையும் உணருவீர்கள். மனைவிவழி உறவினர் உங்கள் உதவியை நாடுவார்.

கும்பம்: சவாலான காரியங்களையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். பிள்ளைகளுடன் இருந்துவந்த கருத்து மோதல்கள் நீங்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பணவரவு திருப்தி தரும்.

மீனம்: பிள்ளைகள் குடும்பச் சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்து கொள்வீர்கள். பூர்வீக சொத்து விஷயத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். பிரபலங்களின் அறிமுகத்தால் உற்சாகமடைவீர்கள்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்