துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @  நவ.30 - டிச.6

By Guest Author

துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - தனவாக்கு ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய், புதன் - சுக ஸ்தானத்தில் சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - களத்திர ஸ்தானத்தில் குரு(வ) - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்ரன், கேது என கிரகநிலைகள் உள்ளது. | கிரக மாற்றங்கள்: நவ.30ம் தேதி - புதன் பகவான் தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | நவ.30ம் தேதி - சுக்கிர பகவான் ராசி ஸ்தானத்திற்கு மாறுகிறார் | டிச. 01ம் தேதி - புதன் பகவான் தைரிய வீர்ய ஸ்தானத்தில் வக்ரம் ஆரம்பிக்கிறார் | டிச.02ம் தேதி - புதன் பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: உங்களுக்கு இந்த வாரம் எதிலும் தன்னம்பிக்கையுடன் ஈடுபட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதிய தொடர்புகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். முக்கிய நபர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்க பெறுவீர்கள். எதிர்பார்த்தபடி எல்லாம் நடந்தாலும் மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்ள நேரலாம். தொழில் வியாபாரத்தில் வேகம் அதிகரிக்கும். எதிர்பார்த்தபடி பொருட்களை அனுப்புவதில் இருந்த தாமதம் நீங்கும். பார்ட்னர்களிடம் இருந்து வந்த மனக்கிலேசல்கள் மாறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திடீர் பயணத்தை சந்திக்க நேரலாம். மேலதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு தக்க பலன் கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும்.

குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். ஆனாலும் கவனமாக எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து செல்வது நன்மை தரும். பிள்ளைகளிடம் கவனமாக இருப்பதும் அன்பாக பேசுவதும் நல்லது. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெண்களுக்கு மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் உண்டாகும். கலைத்துறையினருக்கு வீண் ஆசைகள் மனதில் தோன்றும். அரசியல்துறையினருக்கு காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் திடீர் தடை, தாமதம் ஏற்படலாம். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பெரியோர், ஆசிரியர் அரவணைப்பு இருக்கும். | பரிகாரம்: லஷ்மி அஷ்டோத்திரம் படித்து மகாலட்சுமியை வணங்க செல்வம் சேரும். செல்வாக்கு உயரும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி;

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை - ராசியில் சூர்யன், செவ்வாய், புதன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு(வ) - லாப ஸ்தானத்தில் சுக்ரன், கேது என கிரகநிலைகள் உள்ளது. | கிரக மாற்றங்கள்: நவ.30ம் தேதி - புதன் பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | நவ.30ம் தேதி - சுக்கிர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | டிச.01ம் தேதி - புதன் பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் வக்ரம் ஆரம்பிக்கிறார். டிச.02ம் தேதி - புதன் பகவான் ராசி ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: உங்களுக்கு இந்த வாரம் கிரகங்களின் சாரம் அனுகூலமான பலன்களை தரும் வகையில் இருக்கிறது. மறைமுக எதிர்ப்புகள் குறையும். எடுத்த காரியத்தில் ஏற்பட்ட தடை, தாமதம் நீங்கும். உடல் ஆரோக்கியம் பெறும். வழக்குகள், தகராறுகளில் சாதகமான பலன் கிடைக்கும். எந்த ஒரு விஷயத்திலும் மிகவும் அக்கறை காட்டுவீர்கள். அதேவேளையில் கடுமையான முயற்சிகளும் தேவை. தொழில், வியாபாரம் தொடர்பான போட்டிகள் நீங்கும். மனதில் உற்சாகம் உண்டாகும். புதிய ஆர்டர்கள் பிடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பொருளாதார உயர்வு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் உற்சாகமாக காணப்படுவார்கள். சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். அரசாங்க ரீதியிலான காரியங்கள் மிகச்சிறப்பாக இருக்கும்.

குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனக்கசப்பு மாறும். குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டுவதன் மூலம் அவர்களிடம் நன்மதிப்பை பெறுவீர்கள். மனநிம்மதி உண்டாகும். உறவினர்கள் வருகை இருக்கும். தாய்வழி உறவினர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். பெண்கள் எந்த ஒரு செயலையும் மிகவும் அக்கறையுடன் செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு பணிகளில் கவலைகள் இருந்தாலும் நிறைவாக முடியும். அரசியல் துறையினருக்கு மனோதிடம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பதில் வேகம் காட்டுவீர்கள். எதிலும் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். | பரிகாரம்: குலதெய்வத்தை வணங்கி வர குடும்ப பிரச்சினை தீரும். காரிய வெற்றி உண்டாகும். தொழில் வியாபாரம் சிறக்கும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி - சுக ஸ்தானத்தில் ராகு - பஞ்சம ஸ்தானத்தில் குரு(வ) - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன், கேது - விரைய ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய், புதன் என கிரகநிலைகள் உள்ளது. | கிரக மாற்றங்கள்: நவ.30ம் தேதி - புதன் பகவான் ராசி ஸ்தானத்திற்கு மாறுகிறார் | நவ.30ம் தேதி - சுக்கிர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | டிச.01ம் தேதி - புதன் பகவான் ராசி ஸ்தானத்தில் வக்ரம் ஆரம்பிக்கிறார் | டிச.02ம் தேதி - புதன் பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: உங்களுக்கு இந்த வாரம் ராசிநாதன் குரு நல்ல பலன்களை பெறுவதற்கு உண்டான எல்லா ஸ்தானங்களையும் பார்க்கிறார். எல்லா முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் ஏற்படும். சுபச்செலவுகள் இருக்கும். பணவரத்து திருப்தி தரும். உங்களது செயல்களுக்கு யாராவது ஒருவர் உறுதுணையாக இருப்பார்கள். பேச்சு திறமை கை கொடுக்கும். தொழில் வியாபாரம் மிதமாக இருக்கும். எதிர்பார்த்த பணவரத்து தாமதப்பட்டாலும் கைக்கு வந்து சேரும். தொழில், வியாபாரம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளை செய்ய வேண்டி இருக்கும். உங்களது பேச்சு திறமையால் மேலிடத்தில் இருப்பவர்களிடம் நல்ல பெயர் பெறுவீர்கள். சக ஊழியர்களிடம் கவனமாக இருப்பது நல்லது.

குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை ஏதாவது குறை கூறுவார்கள். அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன் மனைவிக்கிடையே தேவையில்லாத விஷயத்தால் மனவருத்தம் ஏற்படலாம் கவனம் தேவை. குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவீர்கள். பெண்களது செயல்களுக்கு பக்கபலமாக யாராவது இருப்பார்கள். கலைத்துறையினருக்கு நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றிபெற கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது. | பரிகாரம்: ஸ்ரீபைரவரை வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். மன அமைதி கிடைக்கும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி | இந்தவாரம் கிரகங்களின் நிலை:

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

12 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்