மேஷம்: வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகையுண்டு. குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வழக்குகள் சாதகமாகும்.
ரிஷபம்: நீண்ட நாள் சொத்து பிரச்சினை தீரும். மன உளைச்சல் நீங்கும். கலகலப்பாக சிரித்துப் பேசும் சூழல் அமையும். தந்தைவழி உறவினர்களால் மகிழ்ச்சி உண்டு. பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.
மிதுனம்: திறமையுடன் செயல்பட்டு செயற்கரிய காரியங்களை செய்து முடிப்பீர்கள். மனக் குழப்பங்கள் நீங்கும். வேற்றுமொழி பேசுபவர்கள், வேற்றுமதத்தினரால் நன்மை கிட்டும். வாகனம் செலவு வைக்கும்.
கடகம்: கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர். வாக்குறு தியை நிறைவேற்ற போராட வேண்டி வரும்.
சிம்மம்: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசி பழகுவது நல்லது.
கன்னி: அரசுக் காரியங்களில் இருந்து வந்த தடைகள் விலகும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். தள்ளி இருந்த உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். பணவரவு திருப்தி அளிக்கும்.
துலாம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமை அடைவீர்கள். பழைய வழக்கில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். புதிய வாகனம், வீடு வாங்குவீர்கள்.
விருச்சிகம்: வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. தாயார் உடல்நலத்தில் கவனம் தேவை.புது வீடு, மனை, வாகனம் வாங்க யோசிப்பீர்கள். உடன்பிறந்தவர்களிடம் விவாதம் வேண்டாம்.
தனுசு: வீடு, வாகனத்தை மாற்றுவீர்கள். நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டப்படுவீர்கள். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். வெளிநாட்டு பயணம் ஏற்படும்.
மகரம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்களை விரைந்து முடிப்பீர்கள். சிந்தனைத் திறன் அதிகரிக்கும். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உங்களின் ஆரோக்கியம் சீராகும்.
கும்பம்: கணவன் - மனைவிக்குள் ஈகோ பிரச்சினைகள் வந்து நீங்கும். நெருங்கியவரிடம் உங்கள் மனக் குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். யாரையும் தூக்கி எறிந்து பேசுவதை தவிர்க்கவும்.
மீனம்: பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளவும். எதிர்மறை எண்ணங்கள் வரும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். மன அமைதிக்கு தியானம் செய்யவும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
20 hours ago
ஜோதிடம்
20 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
6 days ago