இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: சகோதரர்களால் பயனடைவீர்கள். மகன், மகளின் கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். புதிதாக ஆடை வாங்கி மகிழ்வீர்கள். மனைவிவழி உறவினர் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும்.

ரிஷபம்: அரசால் அனுகூலம் உண்டு. நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பர். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்துவீர்கள்.

மிதுனம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் உயர்கல்வி, வேலை குறித்து யோசிப்பீர்கள். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பழகவும்.

கடகம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

சிம்மம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் ஆதரவுடன் பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களுடன் அறிமுகம் ஏற்படும்.

கன்னி: தம்பதிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். பழைய வாகனம் செலவு வைக்கும். உறவினர்கள் உங்களைப் புரிந்து கொள்வர். அதிக இடவசதி உள்ள இடத்துக்கு குடி போவீர்கள்.

துலாம்: ஒரே நாளில் பல முக்கிய வேலைகளை பார்க்க வேண்டி வரும். எதை முதலில் முடிப்பது என்ற ஒரு டென்ஷன் இருக்கும். தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை. பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.

விருச்சிகம்: தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படுவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். பணப் பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்று வாங்க வேண்டி வரும். புதிய வீடு கட்ட திட்டமிடுவீர்.

தனுசு: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பொது காரியங்களில் ஈடுபடுவீர். புது தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். கலை பொருட்கள் சேரும்.

மகரம்: புதிய பாதையில் பயணிக்க தொடங்குவீர். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். வெளி வட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசி பழகுவது நல்லது.

கும்பம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புதிய முடிவுகள் எடுப்பீர். வர வேண்டிய பணம் கைக்கு வரும். பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிது வாங்குவீர்.

மீனம்: குடும்ப விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தருவதைத் தவிர்க்கவும். பூர்வீக கிராமத்துக்கு செல்ல திட்டமிடுவீர்கள்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

16 hours ago

ஜோதிடம்

16 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்