இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: இழுபறியாக இருந்த செயல்களில் இனி வெற்றி உண்டு. கணவன் - மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். சகோதர வகையில் நன்மை கிட்டும். பணவரவு திருப்தி தரும். பழைய வாகனம் செலவு வைக்கும்.

ரிஷபம்: பேச்சில் கம்பீரம் பிறக்கும். முன்கோபம், வீண் அலைச்சல் விலகி நிம்மதி கிட்டும். பூர்வீக சொத்து பிரச்சினை தீர்ந்து, குடும்பத்தில் அமைதி நிலவும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு.

மிதுனம்: குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்று நினைப்பீர். பிள்ளைகளின் உடல் நிலை சீராகும். நீண்ட நாளைய குலதெய்வ பிரார்த்தனை நிறைவேறும். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.

கடகம்: நீண்ட நாளாக மனதிலிருந்து வந்த குழப்பங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். கிரஹப்பிரவேசம், திருமணம், சீமந்தம் போன்ற சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.

சிம்மம்: அலுவலகப் பணிகளை முடிப்பதிலிருந்த தடுமாற்ற நிலை மாறும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.

கன்னி: வேலைச்சுமை அதிகரிப்பதாக ஆதங்கப்படுவீர்கள். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போகவும். உறவினர்கள் சிலர் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள்.

துலாம்: சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளால் செலவுகள் இருக்கும். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். பழைய பள்ளி நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

விருச்சிகம்: அலுவலகப் பணி, குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் என்று பரபரப்புடன் காணப்படுவீர்கள். ஆடம்பரச் செலவுகளை தவிர்த்து எளிமையாக வாழ விரும்புவீர். குழப்பம் நீங்கி தம்பதிக்குள் நெருக்கம் அதிகமாகும்.

தனுசு: கணவன் - மனைவி இருவரும் மனம்விட்டுப் பேசுவீர்கள். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். கையில் தேவையான அளவு பணம் இருக்கும். வெளியூர் பயணத்தால் ஆதாயம் உண்டு.

மகரம்: புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நல்ல நண்பர்களை சந்திப்பீர். உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும்.

கும்பம்: உணர்ச்சி வேகத்தில் முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். எதிர்மறை எண்ணங்கள் தோன்றும். மன அமைதிக்கு தியானம், யோகா செய்யவும்.

மீனம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். நண்பர்கள், உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. மற்றவர்களிடம் குடும்ப பிரச்சினைகளை கூற வேண்டாம்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்