மேஷம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள் வீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். பூர்வீக வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.
ரிஷபம்: உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறி வீர்கள். தியானம், யோகா, ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிடுவீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும்.
மிதுனம்: புதிய கோணத்தில் சிந்திப்பீர். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளின் தனித் திறமைகளை கண்டறிவீர்கள். அக்கம் பக்கத் தினருடன் அளவாக பேசி பழகுவது நன்மை தரும்.
கடகம்: தாய்வழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். சுப நிகழ்ச்சிகளை வீட்டில் நடத்துவது பற்றி திட்டமிடுவீர். சொத்து வாங்குவது, விற்பது குறித்து குடும்பத்தினருடன் ஆலோசனை செய்வீர்கள்.
» ‘டெட்’ தேர்ச்சி மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு
» கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
சிம்மம்: மனைவிவழி உறவினர்களுடன் இணக்கமாகச் செல்லவும். அழகு, இளமை கூடும். வீட்டுக்குத் தேவையான நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும்.
கன்னி: பழைய பிரச்சினைகள் ஒவ்வொன்றாக தலை தூக்கும். பொறுமையை இழப்பீர். உறவினர், நண்பர்களின் பேச்சும், செயல்பாடுகளும் பிடிக்காமல் போகும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம்.
துலாம்: பிள்ளைகளின் படிப்பு விஷயமாக அலைச்சல் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.அநாவசியச் செலவுகளைத் தவிர்க்க வேண்டும்.
விருச்சிகம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். பழைய வாகனம் செலவு வைக்கும்.
தனுசு: உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பர். நண்பர்கள், உறவினர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வீண் விவாதங்களை தவிர்ப்பீர்.
மகரம்: பிரச்சினைகளின் ஆணி வேரை கண்டறிவீர். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். குடும்பத்தினருடன் புண்ணிய தலங்கள் செல்ல திட்டமிடுவீர். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.
கும்பம்: உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கபாருங்கள். முக்கிய பிரமுகர்களுடன் சந்திப்பு நிகழும். வர வேண்டிய பணத்தை போராடி பெறுவீர்கள். வீடு, வாகன பராமரிப்பு பணிகளை மேற்கொள்வீர்.
மீனம்: நண்பர்கள், உறவினர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவர். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகரிக்கும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
20 hours ago
ஜோதிடம்
21 hours ago
ஜோதிடம்
21 hours ago
ஜோதிடம்
21 hours ago
ஜோதிடம்
22 hours ago
ஜோதிடம்
23 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago