இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: உறவினர்கள், நண்பர்கள் வகையில் அனுகூலமான நிலை காணப்படும். மகளுக்கு தள்ளிப் போன திருமணம் சிறப்பாக கூடி வரும். பழைய வாகனம் செலவு வைக்கும். கலை பொருட்கள் சேரும்.

ரிஷபம்: உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். அடிமனதிலிருந்து வந்த தாழ்வு மனப்பான்மை நீங்கும். குழப்பம், சோம்பல் நீங்கி தெளிவடைந்து சுறுசுறுப்படைவீர்கள். பணவரவு உண்டு.

மிதுனம்: தொட்ட காரியங்கள் எல்லாம் துலங்கும். குழப்பமடையாமல் தனிப்பட்ட முறையில் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர். வெளிவட்டாரத்தில் புகழ், செல்வாக்கு கூடும். விருந்தினர் வருகை உண்டு.

கடகம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிடைக்கும். பிள்ளைகளின் வேலை விஷயத்தில் மனநிம்மதி கிட்டும். மகன், மகளின் கல்யாண முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும்.

சிம்மம்: மனதில் குழப்பம், உடலில் சோர்வு வந்து நீங்கும். வீண் பழிச்சொல்லுக்கு ஆளாவீர்கள். புதிய வாய்ப்புகள் தொடர்பாக தீர யோசித்து முடிவெடுப்பது நல்லது. பழைய வாகனத்தை விற்க முயற்சிப்பீர்கள்.

கன்னி: சுபச் செலவுகள் வரும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். இனி நல்ல இடவசதியுடன் கூடிய வீடு, வாடகைக்கு கிடைக்கும். உறவினர், நண்பர்களின் ஆதரவு கிட்டும்.

துலாம்: பிள்ளைகளின் சாதனைகளால் மகிழ்ச்சி உண்டாகும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் நன்மை உண்டு. புது திட்டங்கள் தீட்டுவீர்கள். தியானம், யோகா, ஆன்மிகம் இவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும்.

விருச்சிகம்: திடீர் பணவரவு, செல்வாக்கு போன்றவை நடக்கும். சகோதர வகையில் உதவியுண்டு. நண்பர்கள், உறவினர்களுடன் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். புதிய வீடு வாங்க கடனுதவி கிடைக்கும்.

தனுசு: எதிர்பார்த்து காத்திருந்த பணம் கைக்கு வரும். தந்தையின் உடல்நலம் சீராகும். புதிய பொறுப்புகள் தேடி வரும். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்தித்து மகிழ்வீர். அக்கம் பக்கத்தினருடன் அளவாக பழகவும்.

மகரம்: வீண் விரயம், டென்ஷன், பிள்ளைகளால் பொருட் செலவு வரக்கூடும். பழைய வாகனம் பழுதாகும். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். நண்பர்கள் ஆதரிப்பர்.

கும்பம்: வர வேண்டிய பழைய பாக்கி கைக்கு வரும். உடன் பிறந்தவர்களின் ஆதரவுடன் பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் தீரும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். மனதில் மகிழ்ச்சி தங்கும்.

மீனம்: மறைமுக எதிர்ப்புகளை வெல்வீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவி வந்த பனிப்போர் நீங்கி, நெருக்கம் அதிகரிக்கும். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வழக்கில் முன்னேற்றம் உண்டு.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

6 days ago

ஜோதிடம்

6 days ago

மேலும்