இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: பெரியளவில் வெற்றி வாய்ப்புகள் தேடி வரும். புது வாகனம், ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.

ரிஷபம்: வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு உரிமையாளர்களால் பிரச்சினைகள் வந்து போகும். குழப்பங்கள் நீங்கி, குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்திக்க வாய்ப்பு உண்டு

மிதுனம்: வேலைச்சுமை அதிகரித்தபடி இருக்கும். வாகனம் பழுதாகி சரியாகும். பணவரவு உண்டு. உங்களுக்கு பிரச்சினைகள் அதிகமாக இருப்பதைப் போல் தோன்றினாலும் இறுதியில் வெற்றி பெறுவீர்கள்.

கடகம்: ஷேர் மூலம் பணம் வரும். தினந்தோறும் எதிர்பார்த்து காத்திருந்த தொகை கைக்கு வரும். அரசாங்கத்தால் நன்மை உண்டு. கிரஹப்பிரவேசம், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள்.

சிம்மம்: மனோபலம் அதிகரிக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை தீர்க்க வழி கிடைக்கும். நண்பர்கள், உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிது வாங்குவீர்கள்.

கன்னி: உங்களுடைய மாறுபட்ட அணுகுமுறை எல்லோரையும் கவர்ந்து இழுக்கும். புதிய வீடு, வாகனம் வாங்க யோகம் உண்டாகும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள்.

துலாம்: சாலையை கடக்கும்போது நிதானம் தேவை. கூடாப் பழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்ப்பது நல்லது. மாலை முதல் எதிர்ப்புகள் விலகும். பிள்ளைகளின் வளர்ச்சியைக் கண்டு மனநிம்மதி கிட்டும்.

விருச்சிகம்: பணவரவு அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். அவ்வப்போது அடிமனதில் சின்னச் சின்ன பயம் வந்து நீங்கும். உறவினர்களுடன் வீண் விவாதம் வேண்டாம்.

தனுசு: முடியாது என்றிருந்த பல காரியங்கள் இப்போது முடிவுக்கு வரும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்கள் உதவுவார்கள். வழக்குகளில் முன்னேற்றம் உண்டு.

மகரம்: உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். பிரச்சினைகள் வெகுவாக குறையும். மகன், மகளின் திருமணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். வேற்றுமொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டு.

கும்பம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பழைய வாகனத்தை மாற்றி விட்டு புதிது வாங்குவீர்கள். வீடு, வாகனம் வாங்க கடனுதவி கிடைக்கும். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை நீங்கும்.

மீனம்: மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி, மகிழ்ச்சி தங்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். திடீர் பணவரவு உண்டு. அரசாங்கத்தால் ஆதாயம் உண்டாகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

37 secs ago

ஜோதிடம்

31 mins ago

ஜோதிடம்

57 mins ago

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்