விருச்சிகம் ராசியினருக்கான நவம்பர் மாத பலன்கள் முழுமையாக | 2023

By Guest Author

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு(வ) - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் - லாப ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சூர், செவ்வாய், புதன் என கிரகநிலைகள் உள்ளது.

கிரக மாற்றங்கள்: 1ம் தேதி புதன் பகவான் ராசி ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 2ம் தேதி சுக்கிரன் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 17ம் தேதி சூர்யன் ராசி ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 17ம் தேதி செவ்வாய் ராசி ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 30ம் தேதி சுக்கிரன் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: உங்களுக்கு இந்த மாதம் எல்லாவிதத்திலும் நன்மை உண்டாகும். மனோதைரியத்தை தரும். எதையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். அந்நிய நபர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. எதிர்ப்புகள் நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் அதிக உழைப்பின் மூலம் லாபம் கிடைக்க பெறுவார்கள். பொருளாதாரம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் சாதகமாக பலன் தரும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த பூசல்கள் அகலும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையையும் கூடுதல் உழைப்பின் மூலம் செய்து முடிக்க வேண்டி இருக்கும். எதிர்பார்த்த பணியிட மாற்றம் - பதவி உயர்வு தங்களைத் தேடி வரும்.

குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். எதிர்பார்த்த தகவல் நல்ல தகவலாக இருக்கும். கணவன், மனைவி இருவரும் எந்த ஒரு முடிவையும் நிதானமாக யோசித்து எடுப்பது நன்மை தரும். அவசரத்தை தவிர்ப்பது நல்லது. சகோதரர் வழியில் உதவியை எதிர்பார்க்கலாம். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

பெண்களுக்கு எதிர்ப்புகள் நீங்கும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கலைத்துறையினருக்கு பாராட்டுகள் வரும். வெளிநாடு பயணங்களும் இனிதே அமையும். எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். நண்பர்களிடையே உறவுநிலை சிறக்க விட்டுக் கொடுத்தல் அவசியமாகிறது. கூட்டுத்தொழிலில் அதிகம் அக்கறை தேவை.

அரசியல் துறையினருக்கு நீண்ட நாளாக இருந்து வந்த பிரச்சினைகள் விலகும். எந்த விஷயத்திலும் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. திடீர் செலவுகள் ஏற்படும். சிக்கன நடவடிக்கை அவசியம் தேவை. உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து அயராது பாடுபடுபவர்கள் அதிகப் பயன் பெறுவார்கள். மாணவர்களுக்கு கூடுதலாக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். தேவையான உதவிகள் கிடைக்கும்.

விசாகம் 4ம் பாதம்: இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்ற வேகத்தில் பணிபுரிவார்கள். சிலருக்கு புதிய பதவி அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்க பெறுவார்கள். சிலருக்கு குடும்பத்தை விட்டு வெளியே சென்று தங்க நேரிடலாம். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். விருந்தினர்கள் வருகை இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும். பிள்ளைகளுடன் சந்தோஷமாக பொழுதை கழிப்பீர்கள்.

அனுஷம்: இந்த மாதம் அடுத்தவர்களின் வேலைக்காக வீணாக அலைய நேரிடும். மனோதைரியம் அதிகரிக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற முழுமூச்சாக பாடுபடுவீர்கள். புதிய நட்பு கிடைப்பதுடன் அவர்களது ஆலோசனையும் வெற்றிக்கு உதவும். ஆனால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

கேட்டை: இந்த மாதம் எதிர்பார்த்த காரிய அனுகூலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் சீர்படும். புதுமையான சிந்தனைகளும், சிறந்த கற்பனையாற்றலும் ஏற்படும். எனினும் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. திடீரென்று கோபம் வரும். ஏதாவது ஒருவகையில் அடுத்தவரிடம் வீண்பேச்சு கேட்க நேரலாம் கவனம் தேவை. மற்றவர்கள் செய்கைகளால் மனவருத்தம் உண்டாகலாம். நீண்டநாள் இழுபறியாக இருந்து வந்த பிரச்சினை முடிவுக்கு வரும்.

பரிகாரம்: செவ்வாய் கிழமையில் விரதம் இருந்து மாலையில் சிவன், நவகிரகங்களை வணங்கி செவ்வாய் பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபட்டு வர எதிர்ப்புகள் விலகும். பிரச்சினைகளில் சுமூக முடிவு உண்டாகும். தைரியம் கூடும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: 2, 3, 29, 30 | அதிர்ஷ்ட தினங்கள்: 18, 19

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

6 days ago

ஜோதிடம்

6 days ago

மேலும்