துலாம் ராசியினருக்கான நவம்பர் மாத பலன்கள் முழுமையாக | 2023

By Guest Author

துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சூர், செவ்வாய், புதன் - சுக ஸ்தானத்தில் சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - களத்திர ஸ்தானத்தில் குரு(வ) - லாப ஸ்தானத்தில் சுக்ரன் - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரகநிலைகள் உள்ளது.

கிரக மாற்றங்கள்: 1ம் தேதி புதன் பகவான் தனவாக்கு ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 2ம் தேதி சுக்கிரன் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 17ம் தேதி சூர்யன் தனவாக்கு ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 17ம் தேதி செவ்வாய் தனவாக்கு ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 30ம் தேதி சுக்கிரன் ராசி ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: உங்களுக்கு இந்த மாதம் வீண் அலைச்சல் இருந்தாலும் பணவரவு நன்றாக இருக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைப்பதில் இருந்து வந்த தாமதம் நீங்கும். மனதில் தெளிவு உண்டாகும். ஆக்கபூர்வமாக எதையும் செய்யும் எண்ணம் தோன்றும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது.

தொழில் வியாபாரம் தொடர்பான கடிதப்போக்குவரத்தால் அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் விரிவுபடுத்துவது தொடர்பான திட்டங்கள் தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணங்களால் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். மேலதிகாரிகள் கூறுவதை மறுத்து பேசாமல் அனுசரித்து செல்வது நன்மையை தரும். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். மேலிடத்துடன் இருந்து வந்த கசப்புணர்வு நீங்கும்.

குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். தெளிவான முடிவுகள் மூலம் நன்மை உண்டாகும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து எதையும் மனம்விட்டு பேசி செய்வது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். குடும்ப வருமானம் அதிகரிக்கும். குடும்பத்திற்கு தேவையான வசதிகளைப் பெருக்குவீர்கள்.

பெண்களுக்கு எதிலும் ஆக்கபூர்வமாக செய்து வெற்றி காண்பீர்கள். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். கலைத்துறையினருக்கு நெருக்கமானவர்களுடன் இனிமையாகப் பேசி பொழுதை கழிப்பீர்கள். தொழில் சிறப்பான முன்னேற்றம் பெறும். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

அரசியல்துறையினருக்கு சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு பெறுவார்கள். பயணங்களால் மகிழ்ச்சியும், ஆதாயமும் கிடைக்கும். நிலம், வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புகள் கை கூடி வரும். நீதிமன்ற வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். வேதாந்த விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கூறுவதை கேட்டு அதன்படி நடப்பதும், பாடங்களில் இருக்கும் சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டு தெரிந்து கொள்வதும் வெற்றிக்கு உதவும்.

சித்திரை 3, 4 பாதங்கள்: இந்த மாதம் உங்களது உடமைகளை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் மெத்தனமான போக்கு காணப்படும். சரக்குகளை அனுப்பும் போதும் பாதுகாத்து வைக்கும் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. செய்யும் வேலை பற்றி மனதில் திருப்தியற்ற எண்ணம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்களுக்கு மனவருத்தத்தை தருவதாக இருக்கலாம். கவனமாக கையாள்வது நல்லது.

சுவாதி: இந்த மாதம் பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நன்மையை தரும். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் அடையும்படியான சூழ்நிலை வரலாம் கவனம் தேவை. உங்களது பொருள்களை கவனமாக பாதுகாத்துக்கொள்வது நல்லது. வீண்பிரச்சினைகளில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவது நன்மைதரும். மாணவர்களுக்கு கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நன்மை தரும். கவனமாக அடுத்தவர்களிடம் பழகுவது நல்லது. வீண் அலைச்சல் குறையும். வேலைபளு நீங்கும். புதிய இடங்களில் திறமைகளை வெளிப்படுத்த தயங்க வேண்டாம்.

விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்: இந்த மாதம் விரும்பாத இடமாற்றம் உண்டாகலாம். குறிக்கோள் இன்றி வீணாக அலைய நேரிடும். செலவும் அதிகரிக்கும். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். மனோதைரியம் கூடும். புதிய நட்பு கிடைக்கும். எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நன்மைதரும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத தடங்கல்கள் வரலாம். பணவரத்து இருந்தாலும் தேவை அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க பெறுவீர்கள். அவர்களால் நன்மையும் உண்டாகும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் விரதம் இருந்து சுக்கிரபகவானை வணங்கி மொச்சை சுண்டல் நைவேத்தியம் செய்ய செல்வம் சேரும். வாழ்க்கை துணையின் ஆதரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: 1, 27, 28 | அதிர்ஷ்ட தினங்கள்: 15, 16, 17

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

6 days ago

ஜோதிடம்

6 days ago

மேலும்