மேஷம்: கொஞ்சம் அலைச்சல் இருக்கும். முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. சில காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். யாருக்கும் எதற்காகவும் உறுதிமொழி தர வேண்டாம்.
ரிஷபம்: வீட்டுக்குத் தேவையான எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை வாங்குவீர்கள். உறவினர்களின் ஆதரவு உண்டு. தாய்வழி உறவினர்களுடன் சுமுகமான நிலை காணப்படும். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்.
மிதுனம்: மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். அரசாங்க அதிகாரிகளின் ஆலோசனைப்படி சொத்து பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வழக்கில் நல்ல முன்னேற்றம் உண்டு.
கடகம்: தடுமாறிக் கொண்டிருந்த சில காரியங்கள் முழுமையடையும். விஐபிகளின் ஆதரவு கிட்டும். தம்பதிக்குள் இருந்து வந்த பிணக்குகள் மாறும். குடும்பப் பிரச்சினைகளை அடுத்தவர்களிடம் கூற வேண்டாம்.
» இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்கு இந்திய பொருளாதார வழித்தட திட்டமே காரணம்: ஜோ பைடன் குற்றச்சாட்டு
சிம்மம்: தேவையற்ற அலைச்சல், பணத் தட்டுப்பாடு இருக்கும். அரசு காரியங்களில் அலட்சியம் வேண்டாம். மருத்துவச் செலவுகள், வீண்பழிகள் வரும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசி பழகுவது நல்லது.
கன்னி: பால்ய நண்பர்களால் திடீர் திருப்பங்கள் ஏற்படும். சேமிக்கும் அளவுக்கு பணவரவு உண்டு. பிள்ளைகளுக்கு புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கித் தருவீர்கள். உறவினர் வருகையால் மகிழ்ச்சி தங்கும்.
துலாம்: முக்கிய பிரமுகர்களின் நட்பு கிட்டும். சகோதர, சகோதரிகள் உங்களை புரிந்து கொள்வார்கள். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். பழைய வாகனம் செலவு வைக்கும்.
விருச்சிகம்: எதிர்பார்த்திருந்த வகையில் உதவிகள் கிடைக்கும். வீண் குழப்பங்கள் நீங்கும். முக்கிய பிரமுகர்களுக்கு நெருக்கமாவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
தனுசு: அரசு காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். பால்ய நண்பர்கள் தேடி வருவார்கள். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். எதிலும் நிதானம் தேவை. பணவரவு திருப்தி தரும்.
மகரம்: நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வருமென எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். மூத்த சகோதர வகையில் இருந்து வந்த மனக் கசப்புகள் நீங்கும். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
கும்பம்: புது முயற்சிகள் யாவும் வெற்றியடையும். குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.புதிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
மீனம்: எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது. குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். அடுத்தவர் மனது புண்படும்படி பேசாதீர்கள். பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிது வாங்குவீர்கள்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
20 hours ago
ஜோதிடம்
20 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago