இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: பல வேலைகள் தடைபட்டு முடியும். பிள்ளைகளிடம் கோபப்படாதீர்கள். அநாவசிய செலவுகளை தவிர்க்கப்
பாருங்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும். பூர்வீக வீட்டை சீரமைக்க முயற்சி செய்வீர்கள்.

ரிஷபம்: பிரச்சினைகளின் ஆணி வேரை கண்டறிவீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவர். பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிது வாங்குவீர்.

மிதுனம்: பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். வாகனத்தை சரி செய்வீர்கள். குடும்பத்தினருடன் புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். நீண்ட நாளாக இழுபறியான வழக்கில் முன்னேற்றம் இருக்கும்.

கடகம்: குழப்பம் அனைத்தும் தீர்ந்து குடும்பத்தில் அமைதி திரும்பும். எதிர்பார்த்த பணம் வரும். உறவினர்களிடம் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவீர்கள். நினைத்த காரியம் நல்ல விதத்தில் முடியும்.

சிம்மம்: குழப்பமான மனநிலையில் இருந்தால் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். எளிதில் முடித்து விடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியில் போய் முடியும். வீண் விவாதங்களை தவிர்க்கவும்.

கன்னி: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பணவரவு திருப்தி தரும். விருந்தினர் வருகை, கேளிக்கை, விருந்து என்று வீடு களைகட்டும். யாருக்கும் உறுதிமொழி தர வேண்டாம்.

துலாம்: பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு. உறவினர்கள் ஆதரவு தெரிவிப்பர். குடும்பத்துடன் சென்று நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை சீரமைப்பீர்கள்.

விருச்சிகம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். நண்பர்கள், முக்கிய பிரமுகர்
களின் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். பூர்வீக சொத்து வழக்கில் திருப்பம் ஏற்படும்.

தனுசு: பழைய சிக்கல்கள் தீரும். தாய்வழி உறவுகளுடன் கருத்து மோதல் வரக்கூடும். புது வேலை கிடைக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பழகவும்.

மகரம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். வாகன வசதி பெருகும். மனைவிவழி உறவினர்களுடன் இணக்கமாகச் செல்லவும். பணவரவு உண்டு.

கும்பம்: குடும்பத்தினருடன் உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் நட்பு கிட்டும். ஆன்மிகம், யோகாவில் நாட்டம் அதிகரிக்கும்.

மீனம்: குடும்பத்தில் கவனமாக செயல்படவும். புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். தம்பதிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். புதிய வாகனம் வாங்குவீர்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்