இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பளித்து அதன்படி நடப்பார்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். புதிய வாகனம் வாங்க முயற்சிப்பீர்கள்.

ரிஷபம்: புது முயற்சிகளில் வெற்றி கிட்டும். குழப்பம் நீங்கி, குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.

மிதுனம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். கணவன் - மனைவிக்குள் இருந்த பிரச்சினைகள் தீர்ந்து அன்யோன்யம் பிறக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். கலை பொருட்கள் சேரும்.

கடகம்: குடும்பத்தில் இருப்பவர்களுடன் கொஞ்சம் வளைந்து கொடுத்து போகவும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். நீண்ட நாளைய வழக்கு, விசாரணைக்கு வரும்.

சிம்மம்: மனசாட்சிக்கு விரோதமின்றி செயல்பட வேண்டுமென நினைப்பீர்கள். கிரஹப்பிரவேசம், திருமணம், சீமந்தம் என்று குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்.

கன்னி: உடன் பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். மகன், மகளின் கல்யாண முயற்சிகள் பலிதமாகும். உங்கள் ஆலோசனையை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். வாகனம் செலவு வைக்கும்.

துலாம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகளின் படிப்பு விஷயம் கவலை அளிக்கும்.

விருச்சிகம்: பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி யோசித்து முக்கிய முடிவு எடுப்பீர்கள். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை நீங்கும் குடும்பத்தினருடன் புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள்.

தனுசு: நீண்ட நாட்களாக இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி, குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். பணவரவு உண்டு.

மகரம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகள் பெருகும். சாமர்த்தியமாக பேசி காரியம் சாதிப்பீர்கள். உங்கள் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். அவசரப்பட்டு யாரையும் புண்படுத்த வேண்டாம்.

கும்பம்: எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் வந்து நீங்கும். உங்கள் திறமைகள் வெளிப்பட்டு, புதிய பொறுப்புகள் கூடும்.

மீனம்: நண்பர்கள், உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். சகோதரர் பாசமழை பொழிவார். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். வீண் விவாதங்களை தவிர்க்கவும். பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிது வாங்குவீர்கள்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

36 mins ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்