இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: தொலை நோக்குச் சிந்தனை அதிகரிக்கும். சந்தர்ப்ப, சூழ்நிலை அறிந்து செயல்படும் சாமர்த்தியத்தை கற்று கொள்வீர்கள். வீண் செலவுகளை கட்டுப்படுத்த திட்டமிடுவீர்கள். பழைய நண்பர்களை சந்திப்பீர்.

ரிஷபம்: சவாலான காரியங்களையும் எடுத்து,சிறப்பாக செய்வீர்கள். அடுக்கடுக்காக செலவுகள் வந்தாலும் அதற்கேற்ற வருமானமும் உண்டு. அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசி பழகவும். கலை பொருட்கள் சேரும்.

மிதுனம்: புதிய பாதையில் பயணிக்க தொடங்குவீர். திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிட்டும். நம்பிக்கைக்கு உரியவர்களின் அறிமுகம் கிடைக்கும். பிள்ளைகளின் படிப்பு விஷயமாக அலைச்சல் உண்டு.

கடகம்: செயலில் வேகம் கூடும். அரசால் அனுகூலம் உண்டாகும். விஐபிகளின் உதவியுடன் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை, குடும்பத்துடன் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

சிம்மம்: பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். உங்கள் ஆலோசனையை குடும்பத்தில் அனைவரும் ஏற்பார்கள். மகளுக்கு உடனே திருமணம் கூடி வரும். குடும்பப் பிரச்சினைகளை மற்றவர்களிடம் கூற வேண்டாம்.

கன்னி: கவுரவ பதவிகள் உங்களைத் தேடி வரும். மனைவிவழி உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புது வேலை அமையும். அரசால் அனுகூலம் உண்டாகும். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.

துலாம்: சவாலான காரியங்களையும் சாதுர்யமாக முடித்து வெற்றி பெறுவீர்கள். தடைகள் யாவும் நீங்கும். குடும்பத்தினருடன் கலந்து ஆலோசித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள்.

விருச்சிகம்: கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தை ஒருவழியாக தந்து முடிப்பீர்கள். கிரஹப்பிரவேசம், திருமணம், சீமந்தம் என்று குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை உருவாகும்.

தனுசு: ஓய்வெடுக்க முடியாதபடி பணிச்சுமை இருக்கும். குடும்பத்தினருடன் சேர்ந்திருக்கும் நேரம் குறையும்.பழைய வாகனத்தை சரிசெய்வீர்கள்.தாயாரின் உடல்நலனில் அக்கறை செலுத்துவது அவசியம்.

மகரம்: குடும்பத்தில் சுபச் செலவுகள் இருக்கும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். வெளியூர் பயணத்
தால் ஆதாயம் உண்டு. மகன், மகளுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

கும்பம்: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் அதிகரிக்கும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும் மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். பழைய வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும்.

மீனம்: உங்களின் நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். வேலைக்கு விண்ணப்பித்து காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல ஊதியத்துடன் பணி அமையும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசி பழகவும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்