இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். இசை, நடனம் போன்ற துறைகளில் பிள்ளைகள் படைத்த சாதனைகளால் பெருமை அடைவீர்கள். பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிது வாங்குவீர்கள்.

ரிஷபம்: நீண்டநாளாக எதிர்பார்த்த வெளிநாட்டுப் பயணம், வெளிநாட்டினரால் ஆதாயம் எல்லாம் உண்டு. உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். வேடிக்கையாக பேசுவது வினையாக முடியும்.

மிதுனம்: மறைமுகமாக செயல்பட்டவர்களை இனம் கண்டு ஒதுக்குவீர். உங்களின் தன்னடக்கத்தை கண்டு அனைவரும் பாராட்டுவர். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர் வருகை உண்டு.

கடகம்: முக்கிய பிரமுகர்களுடன் சந்திப்பு நிகழும். அவர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். இழுபறியான காரியங்கள் இனிமையாக முடியும். பிள்ளைகளை அவர்கள் விரும்பும் படிப்பில் சேர்ப்பது நல்லது.

சிம்மம்: மன உளைச்சல், டென்ஷன், சோர்வு, விரக்தி வந்து போகும். முன்கோபத்தை குறையுங்கள். பிள்ளைகளின் உயர்கல்விக்காக அதிகம் செலவு செய்வீர்கள். யாரிடமும் உங்கள் குறைகளைக் கூற வேண்டாம்.

கன்னி: யாரையும் யாருக்காகவும் சிபாரிசு செய்ய வேண்டாம். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளவும். பழைய வழக்குகள் விசாரணைக்கு வரும். எச்சரிக்கையாக இருக்கவும்.

துலாம்: புதுப் பொலிவுடன் காணப்படுவீர்கள். பிரபலங்களின் உதவி கிடைக்கும். அவர்களின் துணையுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசி பழகவும். பணவரவு உண்டு.

விருச்சிகம்: குடும்பத்தில் கலகலப்புக்கு குறைவில்லை. பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரைகுறையாக நின்றுபோன கட்டிட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். மனைவிவழி உறவினர்களால் பிரச்சினை வரலாம்.

தனுசு: பிள்ளைகளின் கோபம், அலட்சியப் போக்கு மாறும். பழைய நினைவுகள் நெஞ்சில் நிழலாடும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். வெளிநாட்டில் இருந்து விருந்தினர் வருகை உண்டு.

மகரம்: ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து, திரிந்து முடிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம்.

கும்பம்: தடைகள் உடைபடும். மன உறுதியுடன் செயல்படுவீர். பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தாரின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர்கள். நீண்ட நாளாக எதிர்பார்த்து காத்திருந்த பதவி உயர்வு கிட்டும்.

மீனம்: அரசு அதிகாரிகளின் துணையுடன் சில வேலைகளை முடிப்பீர்கள். வெளியூர் பயணங்கள் செலவை ஏற்படுத்தினாலும் புதிய அனுபவம் கிடைக்கும். தேவை இல்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE