இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: பழைய வாகனத்தை மாற்றி விட்டு புதிது வாங்குவீர்கள். வீடு, வாகனம் வாங்க கடனுதவி கிடைக்கும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

ரிஷபம்: சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். டி.வி., வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். மகளுக்கு திருமணம் நிச்சயமாகும்.

மிதுனம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். என்றாலும் சேமித்து வைக்க முடியாதபடி செலவுகள் இருக்கும். சகோதர வகையில் மனநிம்மதி கிட்டும். மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க வேண்டாம்.

கடகம்: பெரியளவில் வெற்றி வாய்ப்பு தேடி வரும். புது வாகனம், ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். பழைய வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள்.

சிம்மம்: உங்களுக்கு எதிரான செயல்பாடுகளை நினைத்து உணர்ச்சிவசப்படுவீர். அடிக்கடி உடல் நிலை பாதிக்கும். முன்கோபப்படுவீர். உங்களைச் சுற்றி இருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். தியானம் செய்யவும்.

கன்னி: திட்டமிட்டபடி வெளிநாட்டு பயணம் அமையும். நீண்ட நாளாக பேசாமலிருந்த நண்பர்கள், உறவினர்கள் மீண்டும் வந்து பேசுவார்கள். திடீர் பணவரவு உண்டு. அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசிப் பழகவும்.

துலாம்: பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். தினந்தோறும் எதிர்பார்த்து காத்திருந்த தொகை கைக்கு வரும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. பழைய வாகனம் செலவு வைக்கும்.

விருச்சிகம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்த திட்டமிடுவீர்கள். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். விருந்தினர் வருகை அதிகரிக்கும்.

தனுசு: எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். பிள்ளைகள் ஆறுதலாக இருப்பார்கள். வெளிநாட்டில் இருப்பவர்கள், வேற்றுமொழி பேசுபவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். எதற்கும் பதறாமல், அமைதியாக இருக்கவும்.

மகரம்: சின்னதாக ஒருவித சலிப்பு, வெறுப்பு, தாழ்வுமனப்பான்மை வந்துபோகும். கொஞ்சம் நேரம் ஒதுக்கி யோகா, தியானம் செய்வது நல்லது. வெளியூர் பயணம், சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். பணவரவு உண்டு.

கும்பம்: உங்களின் முன்னேற்றத்துக்கு தடைகள் வந்தாலும் போராடி வெற்றி பெறும் சக்தி கிடைக்கும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். யாருக்கும் எதற்காகவும் உறுதிமொழி தருவதை தவிர்த்து விடவும்.

மீனம்: தோற்றப் பொலிவு கூடும். உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சவாலான காரியங்களைக் கூட சர்வ சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE