இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: நம்பிக்கை, உற்சாகம் பிறக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணப் பற்றாக்குறை நீங்கும்.

ரிஷபம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உறவினர்களால் நிம்மதி கிடைக்கும். அரசு காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும்.

மிதுனம்: சொன்ன சொல்லை காப்பாற்ற பரபரப்புடன் செயல்படுவீர்கள். மனதுக்கு பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும்.

கடகம்: சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாக, நடப்பது ஒன்றாக இருக்கும். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தம் அடைவீர்கள்.

சிம்மம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துபோகும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். திடீர் வெளியூர் பயணங்கள் ஏற்படும். அலைச்சல், செலவு, அசதி இருந்தாலும், ஆதாயமும் உண்டு.

கன்னி: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நட்பு வட்டாரம் விரிவடையும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உடல்நிலை சீராகும். கனவுத் தொல்லை, தூக்கமின்மை விலகும்.

துலாம்: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். பழைய கடனை பைசல் செய்யும் அளவுக்கு பண வரவு உண்டு. குழந்தைகளின் விருப்பத்தை அறிந்து நிறைவேற்றுவீர்கள்.

விருச்சிகம்: உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் அமைதி நிலவும். வாழ்க்கைத் துணைவர் ஆதரவாக இருப்பார். கையில் பணப் புழக்கம் அதிகரிக்கும்.

தனுசு: உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் அமைதி நிலவும். வாழ்க்கைத் துணைவர் ஆதரவாக இருப்பார். கையில் பணப் புழக்கம் அதிகரிக்கும்.

மகரம்: மனநிறைவுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள்.
கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். சொந்த பந்தங்கள் வருகையால் வீடு களைகட்டும். பேச்சில் பொறுமை தேவை.

கும்பம்: குடும்பத்தில் அமைதி, மகிழ்ச்சி உண்டாகும். நட்பு வட்டாரம் விரிவடையும். தீராத கடன் பிரச்சினைக்கு மாற்றுவழி காண்பீர்கள். வெளியூரில் இருந்து நல்ல சேதி வரும்.

மீனம்: பிரியமானவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். குடும்பத்தினரிடம் மனம்விட்டு பேசுவீர்கள். சகோதர, சகோதரிகள் தக்க சமயத்தில் உதவுவார்கள். ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்படும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

21 hours ago

ஜோதிடம்

21 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

6 days ago

மேலும்