இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: நினைத்ததை முடித்துக் காட்டுவீர். பழைய பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர். அரசால் ஆதாயம் உண்டு. நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். அக்கம் பக்கத்தினரின் தொல்லை நீங்கும்.

ரிஷபம்: மனசாட்சிபடி செயல்படுவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். நட்பு வட்டம் விரியும். பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் கவனம் தேவை

மிதுனம்: மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். அக்கம் - பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போகவும். மாலை முதல் பிரச்சினைகள் விலகும். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

கடகம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். திட்டமிடாத செலவுகள், பயணங்கள் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும்.

சிம்மம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். மகன், மகளின் கல்யாண முயற்சிகள் பலிதமாகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். பணவரவு உண்டு.

கன்னி: உடன்பிறந்தவர்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பீர்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்திகட்டுவீர்கள். பழைய வாகனம் செலவு வைக்கும்.

துலாம்: கணவன் - மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். தடைபட்ட வேலைகள் முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். உறவினர்களால் ஏற்பட்ட பிரச்சினைக்கு தீர்வு காண்பீர்கள். இழுபறியாக இருந்த வழக்குகள் சாதகமாகும்.

விருச்சிகம்: பொறுத்திருந்து சில காரியங்களை முடிக்கப் பாருங்கள். பிள்ளைகளின் உடல் நலத்தில் அக்கறை காட்டவும். மாலை முதல் தடைகள் விலகும். நண்பர்கள், உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும்.

தனுசு: பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள். புது பொருட்கள் சேரும். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்ட திட்டமிடுவீர். மாலை முதல் எச்சரிக்கை தேவை. வீண் விவாதங்களை தவிர்க்கவும்.

மகரம்: வழக்கில் திருப்பம் ஏற்படும். குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவர். குழந்தைகளின் படிப்பு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

கும்பம்: உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நண்பர்கள் ஆதரிப்பார்கள். புதிய தொழில் தொடங்க முயற்சி மேற்கொள்வீர். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

மீனம்: பழைய கடனை தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். தாழ்வுமனப்பான்மை நீங்கும். கலைப் பொருட்கள் சேரும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். குடும்பத்துடன் சென்று குலதெய்வ வழிபாடு செய்வீர்கள்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்