இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: கணவன் - மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். தந்தையின் உடல் நலம் சீராகும். பூர்வீக வீட்டைசீரமைத்து, விரிவுபடுத்தி கட்ட முயற்சி செய்வீர்கள்.

ரிஷபம்: பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிடுவதைத் தவிர்க்கவும். பழைய வாகனம் செலவு வைக்கும். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

மிதுனம்: கணவன் - மனைவிக்குள் வீண் விவாதங்கள் வந்து போகும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். பழைய வழக்குகளில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு அமைய வாய்ப்புண்டு.

கடகம்: பணப் பற்றாக்குறை நீங்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து தீவிரமாக ஆலோசனை செய்வீர்கள். முக்கிய பிரமுகர்களுடன் சந்திப்பு நிகழும்.

சிம்மம்: நீண்ட நாளாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். கொடுக்கல் வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். வெளியூர் பயணம், சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள்.

கன்னி: புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். சமயோஜிதமான பேச்சால் தடைபட்ட காரியங்களை முடிப்பீர்கள். வாகனச் செலவுகள் நீங்கும். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். கலை பொருட்கள் சேரும்.

துலாம்: தாமதமான வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். பணப் பற்றாக்குறையால் பிறரிடம் கடன் வாங்க வேண்டி வரும்.

விருச்சிகம்: முக்கிய பிரமுகர்களுடன் எதிர்பாராத சந்திப்பு நிகழும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தாயார் ஆதரித்துப் பேசுவார். பிள்ளைகள் உங்கள் பேச்சை கேட்பார்கள்.

தனுசு: குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். உடன்பிறந்தவர்களின் நீண்ட நாள் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அடிக்கடி செலவு வைத்த வாகனம் இனி சீராகும். நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும்.

மகரம்: வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். குடும்பத்தாருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. மகள், மகனின் திருமண பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் உண்டு.

கும்பம்: முகப் பொலிவுடன் காணப்படுவீர்கள். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். பிள்ளைகளின் எண்ணங்களைக் கேட்டறிவீர்கள். புதிய பொறுப்புகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். கலை பொருட்கள் சேரும்.

மீனம்: உங்களின் வெளிப்படையான பேச்சை அனைவரும் ரசிப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசுவதைத் தவிர்க்கவும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

19 hours ago

ஜோதிடம்

19 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்