இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: கணவன் - மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து நீங்கும். யாரை நம்புவது என்ற குழப்பத்துக்கு ஆளாவீர்கள். நீங்கள் நகைச்சுவையாக சொல்லும் கருத்துகூட சீரியஸாக வாய்ப்பு உள்ளது.

ரிஷபம்: யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பழைய பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு காண்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும்.

மிதுனம்: வெளியூரில் இருந்து நல்ல சேதி வரும். குடும்பத்தினருடன் கலந்துபேசி முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பணிச்சுமை குறையும். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.

கடகம்: உங்களை சுற்றி இருப்பவர்களால் ஏற்பட்டு வந்த தொல்லைகள் அகலும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். உறவினர்கள், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

சிம்மம்: பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை காட்டுவீர்கள். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வாகனத்தை சரிசெய்வீர்கள். பண வரவு அதிகரிக்கும்.

கன்னி: மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள். எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். ஆன்மிகம், தியானம், யோகாவில் ஈடுபாடு ஏற்படும்.

துலாம்: சாதுர்யமாக பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். புது ரக ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகள் பொறுப்பு உணர்ந்து நடப்பதை பாராட்டுவீர்கள்.

விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள். உறவினர்களிடம் இருந்து பாராட்டு கிடைக்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும்.

தனுசு: மனைவி வழியில் ஒத்துழைப்பு கூடும். வீண், ஆடம்பர செலவை கட்டுப்படுத்தி, சேமிப்பில் கவனம் செலுத்துங்கள். நட்பு வட்டாரம் விரிவடையும். அரசு காரியங்கள் சாதகமாக முடியும்.

மகரம்: இழுபறியாக உள்ள சொத்து பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண்பீர்கள். பணம் வரும். பழுதான வாகனத்தை சரிசெய்வீர்கள். தந்தை வழி உறவினர்களால் ஆதாயம், அனுகூலம் உண்டு.

கும்பம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் நடவடிக்கையில் நல்ல மாற்றங்கள் தெரியும். உடன்பிறந்தவர்களிடம் இருந்து தக்க சமயத்தில் உதவிகள் கிடைக்கும்.

மீனம்: எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். குடும்பத்தினருடன் மனம்விட்டு பேசுவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். அரசு காரியங்களில் ஆர்வம் காட்டுவீர்கள்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE