இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: பழைய வாகனத்தை மாற்றி விட்டு புதிது வாங்குவீர் கள். புதிய வீடு கட்ட கடனுதவி எளிதில் கிடைக்கும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பழகவும்.

ரிஷபம்: சிலருக்கு எதிர்பார்த்த இடத்தில் வேலை வாய்ப்பு வரும். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். வழக்கு சாதகமாகும்.

மிதுனம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். சேமிக்க முடியாதபடி செலவுகளும் இருக்கும். சகோதர வகையில் மனநிம்மதி கிட்டும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். வாகனத்தை சீர் செய்வீர்கள்.

கடகம்: பெரியளவில் வெற்றி வாய்ப்புகள் தேடி வரும். புது வாகனம், ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். வெளி நாடு செல்ல விசா கிடைக்கும். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும்.

சிம்மம்: தேவையில்லாமல் உணர்ச்சி வசப்படுவீர்கள். அடிக்கடி உடல் நிலை பாதிக்கும். முன்கோபம் அதிகரிக்கும். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். பிள்ளைகளின் படிப்பு விஷயம் கவலை அளிக்கும்.

கன்னி: திட்டமிட்டபடி பயணங்கள் அமையும். பேசாமலிருந்த நண்பர்கள், உறவினர்கள் மீண்டும் வந்து பேசுவார்கள். திடீர் பணவரவு உண்டு. ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குவீர்கள்.

துலாம்: பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். தினந்தோறும் எதிர்பார்த்து காத்திருந்த தொகை வரும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. பழைய வாகனம் விற்பனையாகும்.

விருச்சிகம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுகூர்வீர்கள். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்த திட்ட மிடுவீர்கள். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி உண்டு.

தனுசு: எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். பிள்ளைகள் உங்களுக்கு ஆறுதலாக இருப்பார்கள். வெளிநாட்டில் இருப்பவர்கள், பிற மதத்தைச் சேர்ந்தவர்கள், வேற்றுமொழி பேசுபவர்களால் திருப்பம் உண்டாகும்.

மகரம்: சின்னதாக ஒருவித சலிப்பு, வெறுப்பு, தாழ்வுமனப்பான்மை வந்து போகும். கொஞ்சம் நேரம் ஒதுக்கி யோகா, தியானம் செய்வது நல்லது. உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் பணவரவு உண்டு.

கும்பம்: உங்களின் முன்னேற்றத்துக்கு தடைகள் வந்தாலும் போராடி வெற்றி பெறும் சக்தி கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய பதவி, பொறுப்புகள் தேடி வரும். கலை பொருட்கள் சேரும்.

மீனம்: தோற்றப் பொலிவு கூடும். உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சவாலான காரியங்களைக் கூட சர்வ சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். யாருக்கும் எதற்காகவும் உறுதிமொழி தர வேண்டாம்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE