இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By Guest Author

மேஷம்: இங்கிதமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். உறவினர்கள் உதவுவார்கள். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.

ரிஷபம்: எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலை வந்து நீங்கும். உடன்பிறந்தவர்கள் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். நாவடக்கம் தேவை. பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

மிதுனம்: எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலை வந்து நீங்கும். உடன்பிறந்தவர்கள் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். நாவடக்கம் தேவை. பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

கடகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவர். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வழக்கு உங்களுக்கு சாதகமாகும்.

சிம்மம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவர். கைமாற்றாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர். குடும்ப பிரச்சினைகளை பிறரிடம் கூறிக் கொண்டிருக்க வேண்டாம்.

கன்னி: நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். சொந்த - பந்தங்கள் வீடு தேடி வருவர். பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். வாகன வசதி பெருகும். அக்கம் பக்கத்தினரிடம் அளவாகப் பழகவும்.

துலாம்: புது முதலீடுகள் வேண்டாம். பிள்ளைகளிடம் கோபத்தைகாட்டாதீர்கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வெளி உணவுகளை தவிர்க்கப் பாருங்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர்.

விருச்சிகம்: குடும்பத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. புதியவர்கள் அறிமுகமாவார்கள். பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் கவனமாக செயல்படவும்.

தனுசு: வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். எல்லோரும் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். மகளின் திருமணப் பேச்சுவார்த்தை இனிதாக நிறைவடையும்.

மகரம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். புதிய தொழில் தொடங்க வங்கிக் கடனுதவி கிடைக்கும். வாகனம் செலவு வைக்கும்.

கும்பம்: நண்பர்கள் உதவுவார்கள். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். வெளிநாட்டு பயணம் தொடர்பான தடைகள் விலகும்.

மீனம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. தந்தைவழி உறவினர்கள் பாராட்டுவார்கள். வெளியூர் பயணங்கள் சிறப்பாக அமையும். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்