மகரம் ராசியினருக்கான செப்டம்பர் மாத பலன்கள் - முழுமையாக | 2023

By Guest Author

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) - சுக ஸ்தானத்தில் குரு, ராகு - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன்(வ) - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், புதன் - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் கேது என கிரகநிலைகள் உள்ளது.

கிரகமாற்றங்கள்: 17-09-2023 அன்று சூர்ய பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 27-09-2023 அன்று புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 30-09-2023 அன்று சுக்ர பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: எல்லோரிடமும் இதமான அணுகுமுறையும், மனஉறுதியும் மிக்க மகர ராசியினரே! இந்த மாதம் யோக பலனை அள்ளித்தரும் சுக்கிரன் விரையஸ்தானத்தில் இருந்தாலும் பலவகையிலும் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த வேதனையும் சோதனையும் மாறும். உடல் ஆரோக்கியம் வலுப்பெறும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. அரசாங்க காரியங்களில் இருந்த தடை நீங்கும். புத்தி சாதூரியம் அதிகரிக்கும்.

தொழில் வியாபாரத்தில் உயர்வுகள் உண்டாகும். பணியாளர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். அனுபவப் பூர்வமான அறிவு கைகொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்து முடிப்பார்கள். செயல்திறன் அதிகரிக்கும். உங்களுக்கான வேலைகளை சரியான நேரத்தில் செய்து முடித்து பாராடுகள் பெறுவீர்கள்.

குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது குறை சொல்லியபடி இருப்பார்கள். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நன்மையை தரும். பிள்ளைகள் எதிர்காலம் குறித்து தேவையான பணிகளை கவனிப்பீர்கள். பெண்களுக்கு புத்திசாதூரியம் அதிக ரிக்கும். பயணங்களின் போது கவனம் தேவை. வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கள் பொருட்களை பத்திரமாக வைத்திருப்பது நல்லது.

கலைத்துறையினருக்கு திடீர் கோபங்கள் உண்டாகலாம். நிதானமாக இருப்பது நல்லது. புத்திசாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் தள்ளிப் போடாமல் உடனே முடிவு காண்பது நல்லது. தெளிவான சிந்தனை தோன்றும். எந்த காரியத்தையும் செய்யும் முன் ஆலோசனை செய்து அதில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.

அரசியல் துறையினருக்கு சாமர்த்தியமான உங்களது செயல் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். முக்கிய நபர்கள், அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் நட்பு கிடைக்கும். அதனால் கவுரவம் அதிகரிக்கும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதனால் நன்மை உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். திறமை வெளிப்படும். ஆசிரியர்களுடன் நல்ல உறவு ஏற்படும். பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள்.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: இந்த மாதம் உறவினர் மூலம் நன்மை உண்டாகலாம். மனகுழப்பம் நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுக்கும் மனநிலை ஏற்படும். காரிய தடைகள் விலகும். எதிர்பார்த்த பணம் வரலாம். காரிய அனுகூலம் உண்டாகும்.

திருவோணம்: இந்த மாதம் மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். விளையாட்டுகளில் ஈடுபாடு அதிகரிக்கும். உயர்வான எண்ணங்களுடன் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களுடன் நட்பு கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

அவிட்டம் 1,2 பாதங்கள்: இந்த மாதம் கடன் பிரச்சினைகள் தொல்லை தராமல் இருக்கும். எதிர்பார்த்த பணவசதி கிடைக்கும். உங்களது செயல்களுக்கு இருந்த எதிர்ப்புகள் நீங்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும்.

பரிகாரம்: வியாழக்கிழமையில் ஆஞ்சநேயரை வெண்ணெய் சாற்றி வணங்கி வர துன்பமும், தொல்லையும் நீங்கும். மனோதைரியம் அதிகரிக்கும் | அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன் | சந்திராஷ்டம தினங்கள்: 13, 14, 15 | அதிர்ஷ்ட தினங்கள்: 6, 7

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 min ago

ஜோதிடம்

14 mins ago

ஜோதிடம்

45 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்