இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். புது சொத்து வாங்குவீர்கள். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை அடைவீர்கள். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வீட்டு மனை பிரச்சினை எளிதாக முடியும்.

ரிஷபம்: மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் நட்பு வட்டம் விரியும். வாகனம் செலவு வைக்கும்.

மிதுனம்: மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் நட்பு வட்டம் விரியும். வாகனம் செலவு வைக்கும்.

கடகம்: சிறுசிறு அவமானம், வீண் விரயம் வந்து போகும். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். அக்கம் பக்கம் வீட்டாருடன் அளவாகப் பழகவும். பழைய வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு வரும்.

சிம்மம்: கடனாக கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். நீண்ட நாளாக நிறைவடையாத வேலைகள் விரைவாக முடியும். மற்றவர்களை ஏளனமாக நினைப்பதை தவிர்க்கவும்.

கன்னி: எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் கவுரவிக்கப்படுவீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும்.

துலாம்: பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் பங்கேற்பீர். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். கவுரவ பதவிகள் தேடி வரும். ஆன்மிக பெரியோரின் ஆசி கிட்டும். பி்ள்ளைகள் உதவிகரமாக இருப்பர்.

விருச்சிகம்: நிர்வாகத்திறன் கூடும். ஓரளவு பணம் வரும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் அடிமனதிலிருக்கும் பயத்தை போக்குவீர். பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிது வாங்குவீர்கள்.

தனுசு: வெளியூர் பயணங்கள் சிறப்பாக அமையும். விலை உயர்ந்த சமையலறை சாதனங்கள் வாங்குவீர். வேற்று மதத்தவர், வேற்றுமொழி பேசுபவர்கள் அறிமுக மாவார்கள். உடன் பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு.

மகரம்: உங்கள் பேச்சில் கனிவு கூடும். பிரபலங்களின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர். கைமாற்றாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புதிய வாகனம், வீட்டு மனை வாங்க முயற்சிப்பீர்.

கும்பம்: வேலைச்சுமை, நண்பர்களுடன் நெருடல் வந்து நீங்கும். விருந்தினர்களின் வருகையால் செலவுகள் கூடும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.

மீனம்: வீண் சந்தேகம், மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். தங்க ஆபரணங்களை இரவல் தர வேண்டாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். பிறரை எடுத்தெறிந்து பேசுவதைத் தவிர்த்தால் நன்மை உண்டு.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

மேலும்