மேஷம்: குடும்பத்தினருடன் கலந்துபேசி, முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். விலகிச் சென்ற நண்பர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். எதிலும் பொறுமை தேவை.
ரிஷபம்: காலை 10 மணி முதல், வெளிப்படையான பேச்சால் சில காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். எதிலும் மகிழ்ச்சி கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.
மிதுனம்: சிக்கனமாக இருக்க வேண்டும் என்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவு அதிகரிக்கும். சொந்த பந்தங்களால் அன்புத் தொல்லை உண்டு. ஆன்மிகம், யோகாவில் ஈடுபாடு ஏற்படும்.
கடகம்: மனசாட்சிக்கு விரோதமின்றி செயல்பட வேண்டும் என நினைப்பீர்கள். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீண், ஆடம்பர செலவுகளை தவிர்ப்பீர்கள்.
» மேற்கு வங்கத்தில் பட்டாசு ஆலை விபத்தில் 7 பேர் உயிரிழப்பு
» சிஏஜி அறிக்கையால் அம்பலம் மத்திய அரசின் 7 திட்டங்களில் முறைகேடு: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
சிம்மம்: சகோதரரின் விருப்பத்தை அறிந்து நிறைவேற்று வீர்கள் கல்யாண முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தில் அனைவரும் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். வாகனத்தை சரிசெய்வீர்கள்.
கன்னி: புதிய முயற்சிகள், திட்டங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தினரின் எண்ணங்களை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும்.
துலாம்: மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். பண வரவு, பொருள் வரவு திருப்திகரமாக இருக்கும். அரசு, வங்கி காரியங்களில் ஆதாயம், அனுகூலம் உண்டு. நல்லவர்களின் நட்பு கிடைக்கும்.
விருச்சிகம்: வெகுநாளாக மனதில் இருந்த பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண்பீர்கள். குடும்பத்தினர் ஆதரவு பெருகும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகள் உடல்நிலை சீராகும்.
தனுசு: காலை 10 மணி முதல் மனநிறைவுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் அனுசரித்துச் செல்வது அவசியம். பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். சகோதர, சகோதரிகளால் நன்மை உண்டு.
மகரம்: பல வேலைகளை நீங்களே இழுத்துப்போட்டு பார்க்க வேண்டி வரும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். வாகனத்தை எடுக்கும் முன்பு எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள்.
கும்பம்: ஆடம்பர செலவுகளை குறைக்கப் பாருங்கள். மறைமுக போட்டிகளுக்கு பதிலடி தருவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். விருந்தினர், நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டு.
மீனம்: சுறுசுறுப்புடன் செயல்படுவதன் மூலம் காரியங்கள் வெற்றியடையும். குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
16 hours ago
ஜோதிடம்
16 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago