இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: சகோதரர்களுடன் மனவருத்தம் வரும். பணப் பற்றாக்குறை ஏற்படும்.மின்சார சாதனங்களை கவனமாக கையாளுங்கள். பழைய வாகனம் செலவு வைக்கும். பால்ய நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள்.

ரிஷபம்: எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் அவற்றை சமாளிக்கும் உத்வேகம் ஏற்படும்.முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். கவலைகள் நீங்கி புது தெம்பு பிறக்கும். புதிய வீடு கட்ட வங்கிக் கடனுதவி கிடைக்கும்.

மிதுனம்: வழக்குகளில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. இழுபறியாக இருந்து வந்த வேலைகள் முடியும். தந்தைவழியில் உதவிகள் கிடைக்கும். பூர்வீக வீடு, நிலம் தொடர்பான பிரச்சினை தீரும்.

கடகம்: கல்வித் தகுதியை அதிகப்படுத்திக் கொள்வீர். அறிஞர்களின் நட்பு கிடைக்கும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பர். சிலருக்கு பெரிய பொறுப்புகள் கிடைக்கும். வீண் கவலைகளை விட்டொழிப்பது நன்மை தரும்.

சிம்மம்: உங்களிடம் இருக்கும் உடற்சோர்வு மற்றும் மனக் கவலை நீங்கும். உற்சாகமாக புது முயற்சிகளில் இறங்குவீர்கள். வீடு, மனை விற்பதும், வாங்குவதும் லாபகரமாக முடியும். உறவினர்கள், நண்பர்கள் உதவுவார்கள்.

கன்னி: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவார்கள். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு கிடைக்கும். யாருக்கும் எதற்காகவும் உறுதிமொழி தர வேண்டாம்.

துலாம்: மனக் கவலைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். வேற்றுமொழி பேசுபவர்களால் நல்லது நடக்கும். பழைய கடன்கள் ஒவ்வொன்றாகத் தீர வழி கிடைக்கும்.

விருச்சிகம்: உடல் உஷ்ணம் அதிகரிக்கும். யாருக்கும், எதற்காகவும் உறுதிமொழி தர வேண்டாம். சொந்த ஊர் விஷயங்களை முன்னின்று நடத்துவீர்கள். கை, கால்களில் வலி ஏற்படும். பழைய வாகனம் செலவு வைக்கும்.

தனுசு: அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. திடீர் பயணங்கள் வரும். புது வேலையில் சென்று அமர்வீர்கள். நெருங்கிய உறவினர், நண்பர்கள் விரும்பி வந்து பேசுவர். குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு செய்வீர்கள்.

மகரம்: எதிர்பார்த்த வகையில் பணம் வரும். நண்பர்களிடம் இருந்துவந்த பகை நீங்கும். உறவினர்களும் உதவிகரமாக இருப்பர். வேற்று மதத்தவர்கள்,வேற்றுமொழி பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள்.

கும்பம்: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பணவரவு உண்டு. எதிர்ப்புகள், ஏமாற்றங்களை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள். புதிய பதவி, பொறுப்புகள் தேடி வரும்.

மீனம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். நிலம், வீடு வாங்குவது, விற்பது சாதகமாக முடியும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்