இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். பழைய கடன்கள் ஒவ்வொன்றாகத் தீரும்.

ரிஷபம்: எதிர்ப்புகளையும் தாண்டி தொழிலில் முன்னேறு வீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். முக்கிய பிரமுகர்களின் நட்பால் ஆதாயம் உண்டு. நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள்.

மிதுனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். கிரஹப்பிரவேசம், திருமணம் என்று உறவினர் வருகையால் வீடு களைகட்டும். பழைய வாகனம் செலவு வைக்கும்.

கடகம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். அழகு, இளமை கூடும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும்.

சிம்மம்: பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். பழைய கல்லூரி நண்பர்களை சந்திக்க வாய்ப்பு ஏற்படும். பணவரவு உண்டு.

கன்னி: யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். பழைய பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பது நல்லது. வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் அலட்சியம் வேண்டாம்.

துலாம்: பழைய கடன் பிரச்சினை கட்டுக்குள் வரும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். இழுபறியாக இருந்த வழக்கில் நல்ல முன்னேற்றம் இருக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவர்.

விருச்சிகம்: எந்தப் பிரச்சினையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். நண்பர்கள், சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர். சொந்த ஊரில் முதல் மரியாதை கிடைக்கும்.

தனுசு: உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப்பூர்வமாக செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும்.

மகரம்: உங்களுடைய பலம் எது பலவீனம் எது என்று நீங்கள் உணர்ந்து கொள்வது நல்லது. இரண்டாவது முயற்சியில் சில காரியங்கள் முடியும். உறவினர்கள், நண்பர்களுடன் வீண் விவாதங்களைத் தவிர்க்கப் பாருங்கள்.

கும்பம்: குடும்பத்தினருடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். வாகனம் செலவு வைக்கும். பழைய சம்பவங்களை நினைத்து வருந்த வேண்டாம். எல்லாம் நன்மைக்கே என்று நினைத்து முன்னேறிச் செல்லவும்.

மீனம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமையடைவீர். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். உறவினர்களை அனுசரித்துச் சென்றால் நன்மை உண்டு.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்