இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: பெரிய அளவில் வெற்றி வாய்ப்புகள் தேடி வரும். புது வாகனம், ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும்.

ரிஷபம்: வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு வீட்டு உரிமையாளர்களால் பிரச்சினைகள் வந்து போகும். மாலை முதல் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பழைய கடன்களில் ஒன்று தீர வழி கிடைக்கும். பணவரவு திருப்தி தரும்.

மிதுனம்: வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும். வாகனம் பழுதாகி சரியாகும். உங்களுக்கு பிரச்சினைஅதிகமாக இருப்பதைப் போல் தோன்றினாலும் நிறைவில் வெற்றி பெறுவீர். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள்.

கடகம்: ஷேர் மூலம் பணம் வரும். தினந்தோறும் எதிர்பார்த்து காத்திருந்த பழைய பாக்கி கைக்கு வரும். அரசாங்கத்தால் நன்மை உண்டு. கிரகப்பிரவேசம், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள்.

சிம்மம்: குழப்பம் நீங்கி மனோபலம் அதிகரிக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்ட முயற்சி மேற்கொள்வீர்கள்.

கன்னி: வசதி, வாய்ப்புகள் பெருகும். நீண்ட நாள் கனவு நனவாகும். உங்களுடைய மாறுபட்ட அணுகுமுறை எல்லோரையும் கவர்ந்து இழுக்கும். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

துலாம்: சாலையை கடக்கும்போது நிதானம் தேவை. கூடாப் பழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்ப்பது நல்லது. மாலை முதல் எதிர்ப்புகள் விலகும். மனநிம்மதி கிட்டும். வெளியூர் பயணம், சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள்.

விருச்சிகம்: பணவரவு அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். மாலை முதல் அடிமனதில் சின்னச் சின்ன பயம் வந்து நீங்கும். பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் அலட்சியம் வேண்டாம்.

தனுசு: முடியுமா முடியாதா என்றிருந்த பல காரியங்கள் இப்பொழுது முடிவுக்கு வரும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். நண்பர்கள் உதவுவர். உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். பணவரவு உண்டு.

மகரம்: சமூகத்தில் அந்தஸ்து உயரும். நீண்ட நாள் பிரச்சினைகள் வெகுவாக குறையும். மகன், மகளின் திருமணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். பிற மதத்தவர், வேற்றுமொழி பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள்.

கும்பம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பழைய வாகனத்தை மாற்றி விட்டு புதிது வாங்குவீர். வீடு, வாகனம் வாங்க வங்கிக் கடனுதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள், பதவி உங்களைத் தேடி வரும். பணவரவு உண்டு.

மீனம்: எங்கு சென்றாலும் வெற்றி கிடைக்கும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி மகிழ்ச்சி உண்டு. திடீர் பணவரவு உண்டு. அரசாங்கத்தால் ஆதாயம் உண்டாகும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். கலை பொருட்கள் சேரும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

13 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

19 hours ago

ஜோதிடம்

19 hours ago

ஜோதிடம்

20 hours ago

ஜோதிடம்

20 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

மேலும்