இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: மன உளைச்சல் நீங்கும். கலகலப்பாக சிரித்து பேசும் சூழல் அமையும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர். பால்ய நண்பர் உதவிகரமாக இருப்பார்.

ரிஷபம்: அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் உங்களை புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். சிறுசிறு ஏமாற்றம் ஏற்படக் கூடும். பழைய கல்லூரி நண்பர்களை சந்திப்பீர்.

மிதுனம்: மறதி, சோம்பல் வந்து நீங்கும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். தியானம் செய்யவும்.

கடகம்: குடும்பத்தினரின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். தாயின் உடல் நிலை சீராகும். அக்கம் - பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். பழைய கடன்களில் ஒன்று தீர வழி கிடைக்கும். பணவரவு உண்டு.

சிம்மம்: பிள்ளைகளால் மதிப்பு கூடும். வாகனத்தை சீர் செய்வீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வழக்கில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும்.

கன்னி: கணவன் - மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். செலவுகளை கட்டுப்படுத்தி சேமிக்கத் தொடங்குவீர்கள். யோகா, தியானம், ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

துலாம்: உறவினர்கள், நண்பர்களுடன் உரிமையுடன் பேசி பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. நவீன மின்னணு சாதனங்களை வாங்கி மகிழ்வீர்கள்.

விருச்சிகம்: திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் ஆதரவு பெருகும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். உங்கள் பிரச்சினைகளை பிறரிடம் கூறிக் கொண்டிருக்க வேண்டாம்.

தனுசு: உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வெளிவட்டாரத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை கூடும்.

மகரம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். பூர்வீக கிராமத்தில் முதல் மரியாதை கிடைக்கும். பணவரவு உண்டு.

கும்பம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலை அமையும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். முக்கிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். கலை பொருட்கள் சேரும்.

மீனம்: உங்களின் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்