இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: பேச்சில் கம்பீரம், தன்னம்பிக்கை பிறக்கும். உங்கள் செயல்களில் அனுபவ அறிவு வெளிப்படும். உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு.

ரிஷபம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பால்ய நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். மனோபலம் அதிகரிக்கும். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.

மிதுனம்: வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாகக் கையாளுங்கள். நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம்.

கடகம்: எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் எதிர்கொள்ளும் மனப்பக்குவம் கிடைக்கும். நல்ல நண்பர்களின் வழிகாட்டுதலோடு சிக்கல்களையெல்லாம் முறியடித்து வெற்றி காண்பீர்கள்.

சிம்மம்: இழுபறியாக இருந்த விஷயங்கள் உடனே முடியும். வீடு, மனை வாங்குவதற்கு முன்பணம் தருவீர்கள். நீண்ட நாட்களாக இருந்துவந்த சொத்து பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள்.

கன்னி: அடிமனதில் இருந்துவந்த பய உணர்வு நீங்கும். தடைகள் விலகும். சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். விஐபிகளின் அறிமுகமும், உதவியும் கிடைக்கும். ஆன்மிகப் பயணம் மேற்கொள்வீர்கள்.

துலாம்: பால்ய நண்பரின் சந்திப்பால் உற்சாகமடைவீர்கள். சொந்தபந்தங்களின் சுயரூபத்தை தெரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவீர்கள். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.

விருச்சிகம்: தொட்ட காரியங்கள் துலங்கும். மூத்த சகோதரர் வகையில் உதவிகள் உண்டு. திருமணப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும். பழைய இடத்தை விற்று புது வீடு வாங்குவீர்கள்.

தனுசு: சாதுர்யமாகச் செயல்பட்டு கடினமான காரியங்களையும் நிறைவேற்றிக் காட்டுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல திட்டமிடுவீர்கள்.

மகரம்: யாருக்கும், எந்த உறுதிமொழியும் தரவேண்டாம். சொந்த ஊர் விஷயங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆனாலும் சிலர் உங்களை குறைகூறிக் கொண்டிருப்பார்கள். திடீர் பயணம் உண்டு.

கும்பம்: அரசு அதிகாரிகள் உதவிகரமாக இருப்பார்கள். குடும்பத்துடன் புண்ணிய தலங்களுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். மனைவிவழி உறவினர் உங்கள் உதவியை நாடுவார்.

மீனம்: மனதில் நம்பிக்கை பிறக்கும். ஆன்மிகக் காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். விலகியிருந்த நண்பர்கள், உறவினர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். இழுபறியாக இருந்துவந்த தொகை கைக்கு வரும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

20 hours ago

ஜோதிடம்

20 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

6 days ago

மேலும்