இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: பல வகையிலும் பண வரவு அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். கடன் பிரச்சினையில் இருந்து விடுபடுவதற்காக ஓயாமல் உழைப்பீர்கள். முகப் பொலிவு, ஆரோக்கியம் கூடும்.

ரிஷபம்: செலவு கட்டுக்கடங்காமல் போகும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். அவ்வப்போது பணப் பற்றாக்குறை வந்தாலும், கைமாற்று வாங்கி சமாளிப்பீர்கள். எக்காரியத்திலும் நிதானம் தேவை.

மிதுனம்: மன இறுக்கம் குறையும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி அன்யோன்யம் உண்டாகும். சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.

கடகம்: எதிரிகளை வீழ்த்தும் வல்லமை, தைரியம் உண்டாகும். கறாராக பேசி காரியம் சாதிப்பீர்கள். சேமிக்கும் அளவுக்கு வருவாய் அதிகரிக்கும். பழுதான சாதனங்களை மாற்றுவீர்கள்.

சிம்மம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். எதிர்பார்த்த விலைக்கே பழைய சொத்துகளை விற்பீர்கள். பெரிய மனிதர்கள், வெற்றி பெற்றவர்களின் நட்பு கிடைக்கும்.

கன்னி: மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் தெரியும். நாடி வந்தவர்களுக்கு உங்களால் இயன்ற உதவியை செய்வீர்கள்.

துலாம்: புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். வழக்குகளில் சாதகமான திருப்பம் ஏற்படும்.

விருச்சிகம்: எதிர்பார்த்த தொகை கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் அமைதி பிறக்கும். உங்கள் ஆலோசனையை அனைவரும் ஏற்று நடப்பார்கள். அக்கம் பக்கத்தினருடன் அனுசரணை தேவை.

தனுசு: போட்டிகள், சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும். உடல்நலத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டும். வெளி உணவுகளை தவிர்த்துவிடுங்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.

மகரம்: தவிர்க்க முடியாத செலவுகள், பயணங்கள் வரும். உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை நீங்கள் முன்னின்று நடத்த வேண்டிய சூழல் ஏற்படும். பேச்சில் பொறுமை தேவை.

கும்பம்: சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். நவீன ரக வாகனங்கள், மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். தம்பதி இடையே அன்யோன்யம் கூடும்.

மீனம்: கடின உழைப்பால் சாதனை படைப்பீர்கள். தேவையற்ற மனப் போராட்டங்கள் ஓயும். உங்கள் சமயோசிதமான பேச்சால், தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE