கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்) கிரகநிலை - ராசியில் சனி (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு, ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன் - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன்(வ), புதன் - பாக்கிய ஸ்தானத்தில் கேது என கிரகநிலைகள் உள்ளது.
கிரகமாற்றங்கள்: 16-08-2023 அன்று சூர்ய பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 18-08-2023 அன்று சுக்ர பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 19-08-2023 அன்று செவ்வாய் பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 24-08-2023 அன்று சனி பகவான் ராசியில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: வாழ்க்கையில் மனிதர்களுக்கு முக்கியவத்துவம் அளிக்கும் கும்ப ராசியினரே! நீங்கள் உதவிக்கரம் நீட்டுவதில் ஆர்வம் மிக்கவர். இந்த மாதம் சுபகாரியங்களில் கலந்து கொள்ள நேரலாம். சனியின் பார்வை ராசியின் மீது பதிவதால் பணம் வரவு நன்றாக இருக்கும். இழுபறியாக இருந்தவை சாதகமாக முடியக்கூடும். தேவையற்ற கவலைகள் நீங்கும். உங்களை பற்றி விமர்சனம் செய்து வந்தவர்கள் அதனை விட்டுவிடுவார்கள். வழக்குகளில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். எதிர்காலத்திற்கு தேவையான பணிகளை திட்டமிடுவீர்கள்.
தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். கடன் பிரச்சினை தீரும். ஆர்டர் பிடிப்பதில் இருந்த கஷ்டம் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்து முடிப்பார்கள். மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
» மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 27 - ஆக.2
» கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 27 - ஆக.2
பாதியில் நின்ற வீடுகட்டும் பணியை மீண்டும் தொடருவீர்கள். சிலர் புதிய வீட்டிற்கு குடிபுகுவார்கள். கணவன் மனைவிக்கிடையில் திடீரென்று கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம் அடைய தேவையான உதவிகளை செய்வீர்கள். வழக்குகளில் நல்ல தீர்ப்பு வரும்.
பெண்களுக்கு மற்றவர்களிடம் கவனமாக பேசுவது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும். வீண் அலைச்சல் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் போது கவனம் தேவை.
கலைத்துறையினருக்கு புதிய மாற்றம் உருவாகும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது மிகவும் கவனம் தேவை. வெளியூர் வெளிநாடு செல்ல வேண்டி வரலாம். அரசியல் துறையினருக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். நட்பு வட்டாரத்தில் குதூகலம் ஏற்படும்.
அவிட்டம்: இந்த மாதம் பிரிந்து சென்ற தம்பதியினர் ஒன்றுசேர்வார்கள். குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் வருவாய் உண்டு. மருத்துவத் தொழில்புரிவோருக்கு அதிக வருவாய் வரும் மாதம். சோதனைகள் வெற்றியாக மாறும்.
சதயம்: இந்த மாதம் காரியங்கள் அனைத்தும் கைகூடும். உங்கள் செயல்பாடுகள் மற்றவர்களைக் கவரும். உல்லாசப் பயணங்களில் நாட்டம் செல்லும். மனஅடக்கம் பெற தியானம் செய்யுங்கள். படிப்பில் நாட்டம் கூடும். பெற்றோர்கள், பிள்ளைகள் விரும்பியதை வாங்கிக்கொடுப்பார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வந்துசேரும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் வரும்.
பூரட்டாதி: இந்த மாதம் கல்வியில் புதிய மாற்றம் உருவாகும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது மிகவும் கவனம் தேவை. செய்யும் உத்தியோகத்தில் இடமாற்றமோ அல்லது பணி நிரந்தரமோ ஏற்படலாம்.
பரிகாரம்: சனிக்கிழமையில் விஷ்ணு சகஸ்ர நாமம் படித்து பெருமாளை வழிபட எல்லா பிரச்சினைகளும் தீரும். உடல் ஆரோக்கியம் உண்டாகும் | சந்திராஷ்டம தினங்கள்: 19, 20, 21 | அதிர்ஷ்ட தினங்கள்: 12, 13
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago