மேஷம்: மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். அவர்களை இசை, நடனம் உள்ளிட்டவற்றில் பயிற்சி பெறச் செய்வீர். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.
ரிஷபம்: நீண்டநாளாக எதிர்பார்த்த வெளிநாட்டுப் பயணம், வெளிநாட்டினரால் ஆதாயம் எல்லாம் உண்டு. பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர்கள். கடன்கள் அனைத்தும் ஒவ்வொன்றாகத் தீரும்.
மிதுனம்: மறைமுகமாக செயல்பட்டவர்களை இனம் கண்டு ஒதுக்குவீர்கள். உங்களின் தன்னடக்கத்தை கண்டு அனைவரும் பாராட்டுவார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.
கடகம்: பிரபலங்களின் நட்பு கிடைக்கும். அவர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும். இழுபறியான காரியங்கள் இனிமையாக முடியும். அக்கம் பக்கத்தினருடன் அளவாக பழகவும். வாகனம் செலவு வைக்கும்.
சிம்மம்: மன உளைச்சல், டென்ஷன், சோர்வு, விரக்தி வந்து போகும். உறவினர்கள் உங்களிடம் கைமாற்று கேட்பார்கள். பிள்ளைகளின் உயர்கல்விக்காக அதிகம் செலவு செய்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கன்னி: யாரையும் எந்தப் பணிக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும். பணவரவு திருப்தி தரும்.
துலாம்: புதுப் பொலிவுடன் காணப்படுவீர்கள். பிரபலங்களின் உதவி கிடைக்கும். அவர்களின் துணையுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளை அவர்கள் விருப்பப்பட்ட படிப்பில் சேர்க்கவும்.
விருச்சிகம்: உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பணவரவு திருப்தி தரும். அரைகுறையாக நின்றுபோன கட்டிட வேலைகளை இனி விரைந்து முடிப்பீர்கள். வாகனம் செலவு வைக்கும்.
தனுசு: பிள்ளைகளின் கோபம், அலட்சியப் போக்கு மாறும். பழைய நினைவுகள் நெஞ்சில் நிழலாடும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். பொருட்கள் சேரும்.
மகரம்: ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பலமுறை அலைந்து முடிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். யாருக்காகவும் எதற்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம்.
கும்பம்: தடைகள் உடைபடும். மன உறுதியுடன் செயல்படுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தாரின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர்கள். வெளியூர் பயணம், சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள்.
மீனம்: அரசு அதிகாரிகளின் துணையுடன் சில வேலைகளை முடிப்பீர்கள். வெளியூர் பயணங்கள் செலவை ஏற்படுத்
தினாலும் அவற்றால் புதிய அனுபவம் கிடைக்கும். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
4 mins ago
ஜோதிடம்
21 mins ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
13 hours ago
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago