இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். பணவரவு உண்டு. உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பூர்வீக வீட்டை விற்றுவிட்டு புதிது வாங்குவீர்கள். வாகனம் செலவு வைக்கும்.

ரிஷபம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். பழைய பிரச்சினைகள் தலைதூக்கும். கவனம் தேவை.

மிதுனம்: அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். பிற்பகல் முதல் உறவினர்கள் உதவுவார்கள். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும்.

கடகம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். பிற்பகல் முதல் குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். நீங்கள் தவறாக நினைத்த ஒருவர் உங்களுக்கு உதவுவார்.

சிம்மம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கன்னி: எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர்கள், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வழக்கில் நல்ல முன்னேற்றம் உண்டு. அக்கம் பக்கத்தினரிடம் அளவாக பேசவும்.

துலாம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். குல தெய்வ பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். யாருக்கும் உறுதிமொழி தர வேண்டாம்.

விருச்சிகம்: எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளால் ஆறுதல் அடைவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பழைய வாகனம் செலவு வைக்கும். புதிய வீடு கட்ட திட்டமிடுவீர்.

தனுசு: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர். புது வாகனம் வாங்குவீர். நீண்ட நாளாக பேசாது இருந்த உறவினர் உங்கள் வீடு தேடி வருவார். அரசால் ஆதாயம் உண்டு. பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

மகரம்: குடும்பத்தில் கூச்சல், குழப்பம் உண்டாகும். பிற்பகல் முதல் மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். மன அமைதி பெற தியானம் செய்யவும். பிறரிடம் குடும்ப பிரச்சினைகளை கூறுவதைத் தவிர்க்கவும்.

கும்பம்: உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிடுவதை தவிர்க்கவும். புதிய தொழில் தொடங்க நண்பர் உறுதுணையாக இருப்பார். பணவரவு உண்டு.

மீனம்: பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வாகனம் பழுதாகி சரியாகும். உறவினர்கள், நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

மேலும்