இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: திடீர் பயணம் ஏற்படும். காலை 10 மணி முதல் தொண்டை புகைச்சல், கழுத்து வலி வந்து நீங்கும். பிள்ளைகளின் நட்பு வட்டத்தை கண்காணிப்பது அவசியம். பணவரவு ஓரளவு திருப்தி தரும்.

ரிஷபம்: மனநிறைவுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். சொந்த - பந்தங்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி கிட்டும். பழைய வீட்டை விற்றுவிட்டு புதிது வாங்க முயற்சிப்பீர்கள். கலை பொருட்கள் சேரும்.

மிதுனம்: பழைய சொத்து பிரச்சினைகள் தீரும். உடன்பிறந்தவர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். உறவினர்கள் வீட்டுக்கு சென்று வருவீர்கள். பழைய கடன்களில் ஒன்று தீர வழி கிடைக்கும். நண்பர்கள் உதவுவர்.

கடகம்: அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பிள்ளைகளின் படிப்பு குறித்த கவலை மனதில் இருக்கும்..

சிம்மம்: அரசு காரியங்கள் விரைந்து முடியும். பூர்வீக சொத்தை விற்று சில பிரச்சினைகளிலிருந்து வெளி வருவீர்கள். மனைவிவழி உறவினர்களின் ஆதரவு கிட்டும். புதிய நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள்.

கன்னி: பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். நவீன ரக ஆடியோ, வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள். புது வேலை அமையும். கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். அக்கம் - பக்கத்தினருடன் அளவாக பழகவும்.

துலாம்: அனுபவ அறிவால் பல காரியங்களை சாதித்துக் காட்டுவீர்கள். அறிஞர், கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். பணவரவு திருப்தி தரும். நீங்கள் வேடிக்கையாகப் பேசுவது தவறாக புரிந்து கொள்ளப்படும்.

விருச்சிகம்: படபடப்பு, ஒற்றை தலை வலி, வீண் அலைச்சல், உறவினர் பகை வந்து நீங்கும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். உடல் உஷ்ணம் அதிகரிக்கும். வீண் விவாதங்களை தவிர்க்கவும்.

தனுசு: குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர்கள். சகோதரரை நினைத்து சங்கடப்படுவீர்கள். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வழக்கில் வெற்றி கிடைக்கும்.

மகரம்: பிறமொழி பேசுபவர்கள், பிறமதத்தவர்களால் ஆதாயம் உண்டு. அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். வெளியூர் பயணம், சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்.

கும்பம்: அரசு காரியங்கள் விரைந்து முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தார் உதவுவார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். புதிய தொழில் தொடங்க வாய்ப்பு கிடைக்கும். பணவரவு உண்டு.

மீனம்: காலை 10 மணி முதல் எதிலும் வெற்றி கிட்டும். சகோதர பகை, முன்கோபம் விலகும். பழைய நண்பர், உறவினர்களுடன் இருந்து வந்த உரசல் போக்கு நீங்கும். பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிது வாங்குவீர்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்