மேஷம்: சமூகத்தில் பிரபலமானவர்களின் சந்திப்பும், உதவியும் கிடைக்கும். மனைவிவழி உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாகப் பேசுவார்கள். அரசாங்க காரியங்களில் இருந்துவந்த இழுபறி விலகும்.
ரிஷபம்: பிரச்சினைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நண்பர்களின் உதவியால் சில சிக்கல்களுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் வரும். வெளியூர் பயணம் ஏற்படும்.
மிதுனம்: உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். பூர்வீக சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். பிள்ளைகளால் வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.
கடகம்: மனதில் தைரியம் பிறக்கும். சில முக்கிய முடிவுகளை உறுதியுடன் எடுப்பீர்கள். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். சிலர் பழைய வாகனத்தை மாற்றி புது வாகனம் வாங்குவீர்கள்.
சிம்மம்: விலகியிருந்த சொந்தபந்தங்கள் விரும்பி வரு வார்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும். மனைவிவழி உறவினர்கள் உங்கள் உதவியை நாடுவார்கள். பங்கு வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க லாபம் கிடைக்கும்.
கன்னி: நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். பிள்ளைகளின் நட்பு வட்டம் விரியும். உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
துலாம்: பேச்சில் கடுமை வேண்டாம். எந்தப் பிரச்சினையையும் மென்மையாகக் கையாள்வது நல்லது. உறவினர், நண்பர்களின் வருகையால் வீடு களைகட்டும். வேலை தேடுவோருக்கு நல்ல தகவல் வரும்.
விருச்சிகம்: பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். அயல்நாட்டிலிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் நிதான முடன் செயல்படுவது அவசியம்.
தனுசு: எத்தனை தடைகள் வந்தாலும் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பணப்புழக்கம் அதி கரிக்கும். வீட்டை உங்கள் ரசனைக்கேற்ப சீர் செய்வீர்கள். பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்
மகரம்: உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆன்மிகக் காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களோடு இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும்.
கும்பம்: வேலைச்சுமை குறையும். வழக்குகள் சாதகமாகும். சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். பெற்றோரின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள். வராது என்றிருந்த தொகை கைக்கு வரும்.
மீனம்: வாகனம் அவ்வப்போது பழுதாகும். வீடு பராமரிப்புச் செலவு திட்டமிட்டதைவிட அதிகரிக்கும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். அக்கம்பக்கத்தினரின் அன்புத்தொல்லை அதிகரிக்கும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
18 hours ago
ஜோதிடம்
18 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago