மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூன் 22 - 28

By Guest Author

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி - சுக ஸ்தானத்தில் குரு, ராகு - ரண ருண ஸ்தானத்தில் சூர்யன், புதன் - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன், சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளது.

பலன்கள்: இந்த வாரம் உங்களின் சொல்லாற்றலும் செயலற்றலும் அதிகரிக்கும். பணவரத்து இருக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வீண் மனகுழப்பங்கள் ஏற்பட்டாலும் முடிவில் தெளிவு உண்டாகும். தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். தேவையான உதவிகள் தாமதமாக கிடைக்கும். வீண் கனவுகள் தோன்றும்.

தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். தொழில் முன்னேற்றம் தொடர்பான கவலை ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஒரு சின்ன விஷயத்திற்காக கூட அலைய வேண்டி இருக்கும். பணிச்சுமை காரணமாக திடீர் கோபம் உண்டாகலாம். குடும்பத்தில் இருந்து வந்த தேவையற்ற குழப்பங்கள் சரியாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்கள் செயல்களை குடும்பத்தில் உள்ளவர்கள் குற்றம் சொல்லலாம்.

பெண்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபடுவீர்கள். கலைத்துறையினருக்கு யோகக்காரகன் சுக்கிரன் பாக்கியஸ்தானத்தில் இருப்பதால் எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகும். அரசியல்வாதிகளுக்கு மனம் வருந்தும்படியான சூழ்நிலை ஏற்படும். மாணவர்களுக்கு நிதானத்தை கடை பிடிப்பது வெற்றிக்கு உதவும். பாடங்களை கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது.

பரிகாரம்: சனிக்கிழமையில் சனிபகவான், விநாயகரை வழிபடுவது எல்லா காரியங்களும் நன்றாக நடக்க உதவும். கஷ்டங்கள் தீரும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சனி - தைரிய ஸ்தானத்தில் குரு, ராகு - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன், சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளது.

பலன்கள்: இந்த வாரம் பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். எதிர்த்து செயல்பட்டவர்கள் ஒதுங்கி விடுவார்கள். நீண்ட நாள் கஷ்டங்கள் நீங்கும். மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். புத்தி கூர்மையுடன் செயல்படுவீர்கள். தைரியம் உண்டாகும். தொழில், வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். தேவையான பண உதவி கிடைப்பதிலும், புதிய ஆர்டர்கள் கிடைப்பதிலும் தாமதம் ஏற்படும்.

தொழில் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு
உழைப்பு அதிகமாகும். உத்தியோக மாற்றம் ஏற்படலாம். குடும்பத்தில் திடீர் பிரச்சினைகள் ஏற்படலாம். குடும்பச் செலவுகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டியவை தாமதப்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

பெண்களுக்கு மற்றவர்கள் நலனை அக்கறையுடன் கவனிப்பீர்கள். கலைத்துறையினருக்கு சோம்பேறிதனத்தை விட்டுவிட்டு நன்கு உழைப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். அரசியல்வாதிகளுக்கு செயல்திறமை கூடும். பயணங்களும் செல்ல நேரிடலாம். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதற்கு கூடுதல் நேரம் ஒதுக்குவது நல்லது. புத்தி கூர்மையுடன் செயல்படுவது எதிர்கால முன்னேற்றத்திற்கு உதவும்.

பரிகாரம்: வியாழக்கிழமையில் ஆஞ்சநேயரை வழிபடுவது மனோபலத்தை அதிகரிக்கச் செய்யும். எதிர்ப்புகள் அகலும்.

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு, ராகு - சுகஸ்தானத்தில் சூர்யன், புதன் - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன், சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சனி என கிரக நிலைகள் உள்ளது.

பலன்கள்: இந்த வாரம் பணவரத்து கூடும். உடல் சோர்வு உண்டாகலாம். வீண் கவலை அகலும். எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டாகும். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். சொத்துக்கள் சார்ந்த பிரச்சினைகளில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். எதையும் அவசரமாக செய்யத் தோன்றும்.

தொழில், வியாபாரம், லாபகரமாக நடக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல் திறமை மூலம் கடின பணிகளையும் எளிதாக செய்து முடிப்பார்கள். குடும்பத்தில் சுக வாழ்க்கை உண்டாகும். வீட்டில் சுப காரியம் நடக்கும். விருந்தினர்கள் வருகை இருக்கும். உங்களது செயல்களுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இருக்கும். சுதந்திரமான எண்ணம் ஏற்படும்.

பெண்களுக்கு எதிர்ப்புகள் அகலும். கலைத்துறையினர் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில திட்டங்களை ஆலோசிப்பீர்கள். அரசியல்வாதிகள் மேலிடத்திற்கு பயந்து வேலை செய்ய வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி உண்டாகும். கடினமான வேலை களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும்.

பரிகாரம்: முருகனை வணங்கி வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். பணவரத்து கூடும். கடன் பிரச்சினை தீரும் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:


- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்