மேஷம்: நினைத்ததை முடித்துக் காட்டுவீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர். அரசால் ஆதாயம் உண்டு. நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். பணவரவு ஓரளவு திருப்தி தரும்.
ரிஷபம்: மனசாட்சிபடி செயல்படுவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். நட்பு வட்டம் விரியும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.
மிதுனம்: மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். அக்கம் - பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போகவும். பிற்பகல் முதல் பிரச்சினைகள் விலகும். புதிய வீடு வாங்க வங்கிக் கடனுதவி எளிதில் கிடைக்கும்.
கடகம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
» அமெரிக்காவிடம் இருந்து இந்தியா ரூ.24,500 கோடிக்கு 31 அதிநவீன ட்ரோன்களை வாங்க முடிவு
» உ.பி. கோரக்பூர் கீதா பதிப்பகத்துக்கு 2021-ம் ஆண்டுக்கான காந்தி அமைதி பரிசு
சிம்மம்: தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் படிப்பு கவலை அளிக்கும்.
கன்னி: உடன்பிறந்தவர்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பீர்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். பூர்வீக வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள். திருவிழாவில் முதல் மரியாதை கிடைக்கும்.
துலாம்: கணவன் - மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். தடைபட்ட வேலைகள் முடியும். பழைய வாகனத்தை சீர் செய்வீர்கள். உறவினரால் ஏற்பட்ட பிரச்சினைக்கு தீர்வு காண்பீர்கள். புதிய வீடு கட்ட திட்டமிடுவீர்.
விருச்சிகம்: பொறுத்திருந்து சில காரியங்களை முடிக்கப் பாருங்கள். பிள்ளைகளின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். பிற்பகல் முதல் தடைகள் விலகும். மனதில் இருந்த பயம் அகலும். பணவரவு உண்டு.
தனுசு: பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பு அளிப்பார்கள். புது பொருள் சேரும். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்ட திட்டமிடுவீர்கள். பிற்பகல் முதல், செய்யும் செயல்பாடுகளில் எச்சரிக்கை தேவை.
மகரம்: வழக்கில் திருப்பம் ஏற்படும். குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணவரவு உண்டு.
கும்பம்: உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள் நண்பர்கள் ஆதரிப்பார்கள். புதிய பொறுப்புகள் வந்து சேரும்.
தாமதமான செயல்கள் இனி விரைவாக நடந்தேறும்.
மீனம்: பழைய கடனை தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். தாழ்வு மனப்பான்மை நீங்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். குடும்பத்தாருடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். யாருக்கும் உறுதிமொழி தர வேண்டாம்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
31 mins ago
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago