இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: தடைபட்டிருந்த காரியங்கள் அனைத்தும் எளிதில் முடிவடையும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் நல்ல தீர்வு காண்பீர். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.

ரிஷபம்: வேலைச்சுமை அதிகமாகும். தவிர்க்க முடியாத பயணங்களும் இருக்கும். தூக்கமும் கொஞ்சம் குறையும். விவாதங்களை தவிர்க்க பாருங்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.

மிதுனம்: செலவினங்கள் கூடும். நீண்ட நாட்களாக செல்ல நினைத்திருந்த புண்ணிய தலங்களுக்கு குடும்
பத்துடன் செல்ல திட்டமிடுவீர்கள். கிரஹப்பிரவேசம், ஆயுஷ்ஹோமம் என்று வீடு களைகட்டும்.

கடகம்: புது வேலை கிடைக்கும். பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிது வாங்குவீர்கள். சமையலறை, படுக்கை
அறையை நவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

சிம்மம்: இழுபறியாக இருந்து வந்த வேலைகள் முடியும். தந்தையாரின் உடல் நிலை சீராகும். அரசு சம்பந்தப்
பட்ட காரியங்கள் சாதகமாகும். உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். பணவரவு உண்டு.

கன்னி: தைரியம் பிறக்கும். வருங்காலம் பற்றிய பயமும் விலகும். பணப் பிரச்சினையை சமாளிக்க வழி கிடைக்கும்.சொந்த -பந்தங்களிடையே இருந்து வந்த சலசலப்புகள் நீங்கும். மகளுக்கு நல்ல இடத்தில் நிச்சயமாகும்.

துலாம்: செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். அதற்கேற்ப வருமானத்தை பெருக்க வேண்டுமென்று யோசிப்பீர்கள். தங்க ஆபரணங்களை கவனமாக கையாளுங்கள். குல தெய்வ வழிபாடு செய்ய திட்டமிடுவீர்.

விருச்சிகம்: எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கல்யாணப் பேச்சுவார்த்தைகள் நல்ல விதத்தில் முடிவடையும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும்.

தனுசு: பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு. எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில், அவர்கள் விரும்பிய பாடப் பிரிவில் சேர்ப்பீர்கள். ஷேர் மூலமாக பணம் வரும். அக்கம் - பக்கத்தினருடன் அளவாகப் பேசிப் பழகவும்.

மகரம்: பிரச்சினைகளை சமாளிக்கும் சக்தி கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். நீண்ட நாளாக பேசாமலிருந்த உறவினர் வலிய வந்து பேசுவார். கலை பொருட்கள் சேரும்.

கும்பம்: வீட்டை விரிவுப்படுத்தி கட்டுவீர்கள். மின்சார சாதனங்களை மாற்றி அமைக்கும் முயற்சிகளில் இறங்குவீர்
கள். பழைய கடனை நினைத்து அவ்வப்போது பயம் வரும். பால்ய நண்பரை சந்தித்து மகிழ்வீர்.

மீனம்: தொட்டது துலங்கும். தடைகள் அனைத்தும் நீங்கும். இழுபறியாக இருந்து வந்த வேலைகள் முடிவடையும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களும் உடனடியாக நிறைவேறும். வாகனம் செலவு வைக்கும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்